Kanguva: இந்தியாவின் தலைசிறந்த நடிகர் சூர்யா தான்.. கங்குவா காலங்கள் கடந்து பேசப்படும்.. கருணாஸ் பேச்சு!

சென்னை: கங்குவா திரைப்படம் 3டி முறையில் சரித்திர படமாக உருவாகியுள்ளது. இத்திரைப்படம் அடுத்த மாதம் 14ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு இன்று நடைபெற்றது.இதில் பேசிய கருணாஸ், இந்தியாவின் தலைசிறந்த நடிகர் சூர்யா தான் என்றார்.

இதில் பேசிய நடிகர் கருணாஸ், இந்த விழாவின் மூலமாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி, சினிமாவிற்கு வந்த இத்தனை வருஷத்தில் நான் எந்த இயக்குநர் கூடயையும் வேலை செய்யவில்லையே என்று வருத்தப்பட்டது இல்லை. ஆனால், கங்குவா முதல் படப்பிடிப்பு முடிந்ததும், இவருடன் இணையவில்லையே என்று வருத்தப்பட்டேன். டையலாக் பேப்பர் கூட இல்லாமல் ஒரு இயக்குநர் படம் எடுக்கிறார் என்றால், அது சிவா தான் அவருக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

kanguva audio launch

உழைப்பால் உயர்ந்தவர்: நான் லொடுக்கு பாண்டிய நடித்த முதல் படத்தின் ஹீரோ சூர்யா. இவருடன் எப்படியாவது நான்கு வருடத்திற்கு ஒருமுறை ஒரு படத்தில் நடித்துவிடுவேன். நந்தா, பிதாமகன், அயன், சூரரைப்போற்று தற்போது கங்குவா நான் அவருடன் நடித்த அனைத்துப்படமும் வெற்றிப்படம் தான். வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்கலாம். ஆனால், தன்னுடைய உழைப்பால் உயர்த்தவர் தான் சூர்யா. நான் பலருடன் நடித்து இருக்கிறேன். ஆனால், தன்னுடைய வேலையை நேசித்து செய்யக்கூடியவர் தான் சூர்யா. நந்தா படத்தில் நான் சூர்யாவை எப்படி பார்த்தேனோ, அதே சூர்யாவை இந்த படத்திலும், எவ்வளவு பெரிய உயரத்திற்கு சென்றாலும் தான் செய்யும் தொழில் மீது அக்கறையுடன் இருக்கிறார்.

kanguva audio launch

காலங்கள் கடந்து பேசும்: இந்தியாவின் தலைசிறந்த நடிகன் சூர்யா, கங்குவா படத்திற்கு பிறகு தமிழ்நாடு மட்டுமில்ல, இந்தியா மட்டுமில்ல, உலகில் ஒரு தலைசிறந்த நடிகனாக ஒரு தமிழன் இருக்கிறான் என்று சொன்னால் அது சூர்யா தான். இதை நான் மேடைக்காவும்,நீங்கள் கை தட்டவேண்டும் என்பதற்காகவும் சொல்லவில்லை. அவர் மேலையும், அவர் செய்யும் தொழிலை நேசிக்கும் விதமும் நிச்சயம் அவரை மிகப்பெரிய உயரத்திற்கு கொண்டு வருவார் என்று நான் மனமார சொல்லுகிறேன். எத்தனையோ படங்கள் வரும் போகும், ஒரு சில திரைப்படம் தான் காலங்கள் கடந்தும் மனதில் நிற்கும் அப்படி ஒரு திரைப்படம் தான் கங்குவா என்று நடிகர் கருணாஸ் விழாவில் பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X