அழக நம்பி பொழப்பு தேட முடியாது..ஜோவிகாவை விளாசிய நடிகை கஸ்தூரி!
சென்னை: ஜோவிகாவிற்கு படிக்கலனா பிரச்சனை இல்லை என்று பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து கஸ்தூரி பேட்டியில் தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 1 ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கியுள்ளது. நிகழ்ச்சி தொடங்கி இரண்டுவாரம் ஆனநிலையில், போட்டியாளர்களிடையே கருத்து மோதல்களும் தொடங்கியுள்ளன.

இதில், வனிதாவின் மகள் ஜோவிகா படிப்பு தொடர்பாக தெரிவித்த கருத்து பேசுபொருளாகி உள்ளது. அதில், ஜோவிகாவிடம் நடிகை விசித்ரா தமிழில் எழுதிக் காட்டச் சொல்கிறார். அதற்கு ஜோவிகா எனக்கு தமிழ் வரலை, அதனால நான் எழுதமாட்டேன் என்று பேசி அது பெரும் விவாதமானது
நடிகை கஸ்தூரி: இது குறித்து பேட்டி அளித்துள்ள நடிகை கஸ்தூரி, நான் பிக் பாஸ் சீசன் 3 கலந்து கொண்டேன்,அதற்கு முன்னாடியும் நான் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கல, பின்னாடியும் பார்க்கல. ஆனால், இணையத்தில் ஜோவிகா வாழ்க்கையில் ஜெயிப்பதற்கு கல்வி தேவையில்லை என்று ஆக்ரோஷமா பேசிய வீடியோவை பார்த்தேன்.
ஜோவிகாவிற்கு கல்வி தேவையில்ல: என்னை பொருத்த வரை, படிப்பையும், திறமையையும் நான் சம்மதப்படுத்தி பார்க்கவில்லை. படிப்பு என்பது வேற, திறமை என்பது வேற. ஆனால், கல்வி என்பது அடிப்படை தகுதி என்பதை விட, வாழ்க்கைக்கு ஒரு பேக்கப்பாக படிப்பை சொல்லலாம். ஜோவிகாவிற்கு பணம் இருக்கிறது, குடும்ப பின்னணி இருக்கு. அவர் ஏற்கனவே ஜெயித்துவிட்டார் என்பதால், ஜோவிகாவிற்கு கல்வி தேவையே இல்லை.

அழகை நம்பி பொழப்பு தேடமுடியாது: ஆனால், வாழ்க்கையில் போராடிக்கொண்டு இருப்பவர்களுக்கு கல்வி என்பது தேவையான ஒன்று, அழகை நம்பி பொழப்பு தேடமுடியாது. ஆனால், படிப்பில் குறைந்தபட்ச தகுதி இருந்தா, ஏதோ ஒரு நேரத்தில் வாழ்க்கையோடு போராட அது உதவியாக இருக்கும். ஜோவிகா தற்போது தேர்ந்து எடுத்து இருப்பது கலைத்துறை இதற்கு சம்பளம் கிடைக்குமா கிடைக்காதானு யாருக்கு தெரியும்.
வாய்ப்பு கிடைக்க காரணம்: மேலும்,ஜோவிகா வனிதா விஜயகுமாரின் மகளாக இல்லாமல் இருந்து இருந்தால்,18 வயசு ஆன உடனே, இது மாதிரி ஒரு வாய்ப்பு கிடைக்குமா, இவங்களுடைய அம்மா யாரு, இவங்களுக்கும் விஜய் டிவிக்கும் இருக்கும் நட்பை வைத்துத்தான் ஜோவிகாவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பே கிடைத்தது என்று நடிகை கஸ்தூரி பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











