அந்த வீடியோவை ட்விட்டரில் ஷேர் செய்துவிடாதீர்கள்.. அப்புறம் எல்லாம்.. நடிகைக்கு ரசிகர் வைத்த கோரிக்கை!

சென்னை: இன்ஸ்டாவில் தற்போது இந்திய அளவில் ட்ரெண்ட்டிங்கில் உள்ள பாடல் என்றால் அது இந்தியில் வெளியாகியுள்ள பேபி ஜான் படத்தில் இடம் பெற்றுள்ள உல்லலாய் உல்லலாய் பாடல்தான். இந்தப் பாடலுக்கு நெட்டிசன்கள் ரீல்ஸ் எடுத்து போட்டு வரும் நிலையில் நடிகை கஸ்தூரி தனது வீட்டு பால்கனியில் இந்தப் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோவை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அதனைப் பார்த்த இணையவாசிகள் மற்றும் அவரைப் பின் தொடருபவர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அதில் மிகவும் மோசமான மற்றும் ஆபாசமான கமெண்ட்டுகளையும் இணையவாசிகள் பகிர்ந்துள்ளனர்.

பேபி ஜான் திரைப்படம் தமிழில் விஜய் நடித்து வெளியான தெறி படத்தின் அதிகாரப்பூர்வ இந்தி ரீமேக் தெறி படத்தினை தமிழில் இயக்கிய அட்லீ, இந்தியில் இந்தப் படத்தினை தயாரித்தார். இந்தப் படத்தில், வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி, ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்தனர். அதேநேரத்தில் படத்தில் சல்மான் கான் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்தார்.

kasthuri shankar kashturi reels baby john

படத்திற்கு தமன் இசை அமைத்துள்ளார். தமிழ் படத்தில் இருக்கும் பெரும்பான்மையான காட்சிகள் அப்படியே எடுத்து வைத்துள்ளதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். படத்தில் இடம் பெற்ற உல்லலாய் பாடலைத்தான் படத்தின் புரோமோசனுக்கு எல்லாம் படக்குழுவினர் பயன்படுத்தினர். இதனால் இந்த பாடல் இணையத்தில் குறிப்பாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் அதிகம் ஹிட் அடித்தது.

kasthuri shankar kashturi reels baby john

வீடியோ: இந்நிலையில் இந்தப் பாடலுக்கு நடிகை கஸ்தூரி தனது வீட்டு பால்கனியில் நடனமாடி வீடியோ பதிவிட்டு, அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு பால்கனி பேபி ஜான் என அவர் கேப்ஷனும் இட்டுள்ளார். இவரது இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் பலர் அவர் சிறப்பாக நடனமாடுவதாக பதிவிட்டுள்ளனர்.

kasthuri shankar kashturi reels baby john

ட்விட்டரில்: மேலும் பலர், கஸ்தூரி செம எனர்ஜியாக நடனம் ஆடுகின்றார். கஸ்தூரி நீங்கள் இப்போது எப்படி மகிழ்ச்சியாக உள்ளீர்களோ அதேபோல் எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள். எக்காரணம் கொண்டு இந்த வீடியோவை ட்விட்டரில் ஷேர் செய்துவிடாதீர்கள், உங்களைப் பிடிக்காதவர் மிகவும் அப்செட் ஆகிவிடுவார்கள் என கமெண்ட் செய்துள்ளனர்.

ஆபாசமான கமெண்ட்: அதேநேரத்தில் இணையவாசிகள் சிலர், கஸ்தூரியின் உருவத் தோற்றம் குறித்தும், மிகவும் ஆபசமாகவும் கொச்சையாகவும் கமெண்ட் செய்துள்ளனர். தனது மகிழ்ச்சியை கஸ்தூரி வெளிப்படுத்தியுள்ளார். அப்படியான வீடியோவுக்கு சில இணையவாசிகள் ஆபாசமாக கமெண்ட் செய்துள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

kasthuri shankar kashturi reels baby john

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X