அஜித்தின் பட டைட்டிலில் நடிக்கும் கதிர்.. ஏகே61 பர்ஸ்ட் லுக்குடன் வெளியான ஆசை படத்தின் அப்டேட்!
சென்னை : அஜித்திற்கு சிறப்பான என்ட்ரியை தமிழ் சினிமாவில் கொடுத்த படம் ஆசை. இந்தப் படத்தில் அவருக்கு சுவலட்சுமி ஜோடியாகியிருந்தார்.
இந்தப் படம் வெளியாகி 27 ஆண்டுகளை சமீபத்தில் கடந்துள்ளது. இதையொட்டி ரசிகர்கள் இந்தப் படத்தை ட்ரெண்டாக்கினர்.
ரொமாண்டிக் த்ரில்லராக வெளியான இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ் சைக்கோ வில்லனாக மிரட்டியிருப்பார்.

நடிகர் அஜித்
நடிகர் அஜித்தின் கேரியரில் மறக்க முடியாத படம் என்றால் அது ஆசை தான். இந்தப் படத்திற்கு முன்னதாக பவித்ரா உள்ளிட்ட சில படங்களில் அஜித் நடித்திருந்தாலும் ரொமாண்டிக் த்ரில்லாக உருவான ஆசை படம் தான் அவருக்கு சிறப்பான என்ட்ரியை கொடுத்தது. இந்தப் படத்தை இயக்குநர் வசந்த் இயக்கியிருந்தார்.

சிறப்பான படம்
இந்தப் படத்தை தொடர்ந்தே சிறப்பான கதைக்களங்களுடன் கூடிய படங்கள் அஜித்திற்கு கிடைத்தன. தொடர்ந்து ஆக்ஷன் அவதாரமும் எடுத்து, ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நடிகராகவும் மாறியுள்ளார். தற்போது இவரது நடிப்பில் உருவாகிவரும் ஏகே61 படத்திற்கு துணிவு என்று பெயரிடப்பட்டுள்ளது.

அஜித் படத்தின் டைட்டில்
ஏறக்குறைய ஏகே61 படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு 164 நாட்களுக்கு பிறகு இந்த பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதையடுத்து அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர். இதையொட்டி சமூக வலைதளங்களில் துணிவு ஹேஷ்டேக் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளது.

கதிரின் புதிய படம் ஆசை
இதனிடையே கதிர் மற்றும் திவ்யபாரதி இணைந்து நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் இன்றைய தினம் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்கு அஜித்திற்கு சிறப்பான நடிகர் அந்தஸ்தை கொடுத்த ஆசை படத்தின் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்
இன்றைய தினம் அஜித்தின் ஏகே61 படத்தின் டைட்டில் வெளியாகியுள்ள சந்தோஷத்தில் அவரது ரசிகர்கள் உள்ள நிலையில், மேலும் அவரது ஆசை பட டைட்டிலில் புதிய படம் வெளியாகவுள்ளதும் அவர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இதையடுத்து இரட்டிப்பு சந்தோஷத்தில் அவர்கள் காணப்படுகின்றனர்.


Click it and Unblock the Notifications











