Actor Kavin: வெற்றிமாறனுடன் கவின் இணையும் படம்.. பூஜையுடன் துவக்கம்.. டைட்டில் என்ன தெரியுமா?
சென்னை: நடிகர் கவின் நடிப்பில் அடுத்தடுத்து லிப்ட், டாடா படங்கள் வெளியாகி அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்துள்ளன. கடந்த ஆண்டில் வெளியான டாடா படம் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்து வெற்றிப் படமாக அமைந்தது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான ஸ்டார் படமும் கவினுக்கு சிறப்பாகவே அமைந்துள்ளது. படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் படத்தை ரசிகர்கள் வெற்றிப்படமாக்கியுள்ளனர்.
அடுத்ததாக நெல்சன் திலீப்குமாரின் பிளடி பெக்கர், நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் கிஸ் படங்களில் நடித்து வருகிறார் கவின். இதில் கிஸ் படம் தீபாவளிக்கு ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே அடுத்ததாக வெற்றிமாறன் தயாரிப்பில் புதிய படத்தில் இணைந்துள்ளார் கவின். இந்த படத்திற்கு மாஸ்க் என்று பெயரிடப்பட்டுள்ளது.

நடிகர் கவின்: நடிகர் கவின் அடுத்தடுத்து லிப்ட் மற்றும் டாடா படங்களின் மூலம் கவனத்தை ஈர்த்து ஏராளமான ரசிகர்களின் அன்பிற்கு சொந்தக்காரராக மாறியுள்ளார். கடந்த ஆண்டில் வெளியான டாடா படம் அவரது கேரியர் பெஸ்டாக அமைந்துள்ளது. இந்தப் படத்தில் தன்னுடைய குழந்தை வளர்ப்பிற்கு அவர் செய்யும் விஷயங்கள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து இந்த படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. தன்னுடைய இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வரும் கவின் தொடர்ந்து கோலிவுட்டில் தன்னுடைய சம்பளத்தையும் உயர்த்தியுள்ளதாக அவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஸ்டார் படம்: இந்நிலையில் அவர் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக வெளியான ஸ்டார் படம் அவருக்கு மீண்டும் சிறப்பான வரவேற்பையும் வசூலையும் பெற்று தந்துள்ளன. இந்நிலையில் இந்த படத்தை தொடர்ந்து அவர் அடுத்தடுத்த படங்களில் தன்னை தொடர்ந்து கமிட் செய்து வருகிறார். அடுத்ததாக நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் ப்ளடி பெக்கர் படத்தில் இணைந்துள்ளார். இதனிடையே, டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கத்தில் கிஸ் படத்தில் நடித்து வருகிறார். இதன் சூட்டிங் இன்னும் சில தினங்களில் நிறைவடைய உள்ளதாக கூறப்பட்டுள்ள சூழலில் வரும் தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வெற்றிமாறனுடன் கூட்டணி: இந்நிலையில் அடுத்ததாக வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் இணைந்துள்ள படத்தின் பூஜை தற்போது பிரம்மாண்டமாக நடந்துள்ளது. படத்தில் அவருடன் வில்லியாக ஆண்ட்ரியா நடிக்க கமிட்டாகியுள்ளார். மேலும் பிரபல தெலுங்கு பட நாயகி ருஹானி சர்மா இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார். படம் சைக்கோ திரில்லர் பாணியில் உருவாகும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் விக்ரான் அசோகன் இயக்க உள்ளார். இந்நிலையில் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகவுள்ள இந்தப் படம் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தப் படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார்.
பாடல்கள் இல்லாத படம்: படத்தில் பாடல்களே இல்லை என்றும் பிஜிஎம் மட்டுமே இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதனால் ஜிவி பிரகாஷ் பிஜிஎம்மில் கலக்குவார் என்று எதிர்பார்க்கலாம். அடுத்தடுத்து முன்னணி இயக்குநர்களின் தயாரிப்பில் இணைந்து வருகிறார் கவின். முன்னதாக நெல்சன் திலிப்குமார் தயாரிப்பில் பிளடி பெக்கர் படத்திலும், தற்போது வெற்றிமாறன் தயாரிப்பில் அவர் இணைந்துள்ள சூழ்நிலையில் விரைவில் அவர்களின் இயக்கத்திலும் இணைவார் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











