Kavin: கிஸ் கிஸ் கிஸிக்...கவின் படத்தின் பெயர் என்ன தெரியுமா?

சென்னை: கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி போன்ற சீரியல்களில் நடித்து டீன் ஏஜ் பெண்களின் கனவு நாயகனாக இருந்த நடிகர் கவின். தனக்கு தகுந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு இவரது நடிப்பில் 'ப்ளடி பெக்கர்' வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில் தற்போது அவர், ஹீரோவாக நடிக்கும் நான்காவது திரைப்படத்தின் பெயரை படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் கவின் நடிப்பில் 2021ம் ஆண்டு வெளியான படம் லிஃப்ட். வினீத் வரபிரசாத் இயக்கிய இந்த திரைப்படத்தில் அமிர்தா ஐயர், கவினுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த படம் தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் வெளியாகி வரவேற்பை பெற்றது. முதல் படமே கவினுக்கு பெயர் சொல்லும் திரைப்படமாக அமைந்தது. அதன் பின், கவின் நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் ரசிகர்களின் வரவேற்போடு ஹிட் லிஸ்ட்டில் இணைந்தது. அந்த படத்தில் கவின் ஜோடியாக பீஸ்ட் பட புகழ் அபர்னா தாஸ் நடித்திருந்தார். மேலும்,பாக்யராஜ், விடிவி கணேஷ் என பலர் நடித்திருந்தனர்.

Kavin kiss

இளசுகளுக்கு பிடித்த படம்: டாடா படத்தை இளசுகள் முதல் பெரிசுகள் வரை ரசித்துப் பார்த்தனர். இந்த படத்தை பார்த்த நடிகர் கமல்ஹாசன் படக்குழுவினரை வெகுவாக பாராட்டினார். டாடா படத்தின் வெற்றியால் நல்ல ஹீரோ என பெயர் எடுத்த கவின், ஸ்டார் என்ற படத்தில் நடித்தார். அந்த படமும் பெரிய அளவில் வெற்றி பெற்று கவின் தரத்தை உயர்த்தியது. ஸ்டார் படத்தைத் தொடர்ந்து கவின் நெல்சன் திலிப்குமார் தயாரித்த பிளடி பெக்கர் படத்தில் நடித்தார். இந்த படத்தை நெல்சனிடம் உதவி இயக்குநராக இருந்த சிவபாலன் இயக்கி இருந்தார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தியேட்டரில் வெளியான இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு விமர்சனத்தை பெறாமல், நெல்சனை கஜனாவை காலி செய்தது.

Kavin kiss

கவின் படத்தின் தலைப்பு: தனக்கு கிடைத்த பெயரை சரியாக பயன்படுத்தி சிவகார்த்திகேயன் போல் ஆகவேண்டும் என்று திட்டம் போட்டு, நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் கவின் தற்போது, நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.. ரோமியோ பிக்சர்ஸ் சார்பாக ராகுல் தயாரிக்கும் இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார். விறுவிறுப்பாக நடந்து வந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் நிறைவடைந்த நிலையில், தற்போது படத்தின் பெயரை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இப்படத்திற்கு 'கிஸ்' எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், போஸ்டரும் கண்கள் மறைக்கப்பட்டு கவின் இருக்கிறார். இதற்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை என இணையவாசிகள் கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X