Kavin: ஹீரோயின்கூட ஷாட் இருக்கா.. கவின் கேட்ட கேள்வி.. விஷ்ணு விஷாலுக்கு டூப் போட்ட டாடா நடிகர்!
சென்னை: நடிகர் கவின் வளர்ந்து வரும் இளம் நடிகராக அடுத்தடுத்த படங்கள் மூலம் கவனம் பெற்று வருகிறார். இவரது ஷிப்ட் படம் ஓடிடியில் வெளியான நிலையிலும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து இவரது கேரியரில் சிறப்பான பிள்ளையார் சுழியை போட்டது. அடுத்ததாக நடித்த டாடா படம் மிகச் சிறப்பான வெற்றியை கவினுக்கு கொடுத்தது. கவினின் கேரியர் பெஸ்ட் படமாக அமைந்தது.
கவின் நடிப்பில் அடுத்தடுத்து ஸ்டார், ப்ளடி பெக்கர் என படங்கள் வெளியான நிலையில் அவை கலவையான விமர்சனங்களை பெற்றன. தொடர்ந்து வளர்ந்து வரும் இயக்குநர்களுடன் இணைந்து படங்களை கொடுத்து வருகிறார் கவின். வளர்ந்து வரும் இயக்குநர்களுக்கு தான் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் என்றும் தனது பேட்டியொன்றில் அவர் கூறியிருந்தார்.

நடிகர் கவின்: நடிகர் கவின் அடுத்தடுத்த படங்கள் மூலம் கவனம் பெற்று வருகிறார் வளர்ந்து வரும் இளம் நடிகரான இவருக்கு விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி சிறப்பான வரவேற்பையும் ஏராளமான ரசிகர்களையும் பெற்றுக் கொடுத்தது. இதையடுத்து ஓடிடியில் வெளியான லிப்ட் படம் மூலம் தன்னுடைய ரசிகர்களை மேலும் பெருக்கிக் கொண்டார் கவின். தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான அடுத்த படம் தான் மிகப்பெரிய ஹைலைட்டாக அமைந்தது. டாடா படத்தில் ஒரு குழந்தையின் அப்பாவாக நடித்து ரசிகர்களை கட்டி போட்டார். இந்தப் படம் அதிரிபுதிரி வெற்றியை கொடுத்தது. அவரது கேரியர் பெஸ்ட்டாகவும் அமைந்தது.
அடுத்தடுத்த படங்கள்: தொடர்ந்து கவின் நடிப்பில் ஸ்டார் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையிலும் சிறப்பாகவே அமைந்தது. ஆனால் கடந்த தீபாவளிக்கு கவின் நடிப்பில் வெளியான பிளடி பெக்கர் படம் சோதனையாகவே அமைந்தது. இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் படம் சொதப்பலான முடிவை கொடுத்தது. இந்த படத்தின் மூலம் இயக்குநர் நெல்சன் திலிப் குமார் தயாரிப்பாளராக களமிறங்கியிருந்தார். படத்தில் பிச்சைக்காரனாக இருக்கும் கவின், ஒரு மாளிகைக்குள் போய் மாட்டிக் கொள்வதாக கதைக்களம் அமைந்திருந்தது. குழப்பமான திரைக்கதையால் இந்த படம் திண்டாடியது. ரசிகர்களையும் திண்டாட வைத்தது.
விஷ்ணு விஷாலுக்கு டூப்: இந்நிலையில் கவின் கொடுத்துள்ள பேட்டியொன்றில் தன்னுடைய திரைப்பயணம் குறித்த பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார். தான் சினிமாவில் நடிக்க முயற்சித்து வந்த நிலையில் ஒரு படத்தில் விஷ்ணு விஷாலுக்கு டூப் போட்டதாக தெரிவித்துள்ளார். அன்றைய தினம் விஷ்ணு விஷாலுக்கு டூப் போடும் நபர் வராததால் அதற்கு காரணமான உதவி இயக்குநர், இயக்குநரிடம் விஷயத்தை கொண்டு செல்லாமல் தன்னை வைத்து அந்தக் காட்சியை எடுத்ததாக கவின் தெரிவித்துள்ளார். ஆனால் தான் அது குறித்தெல்லாம் கவலை கொள்ளாமல் ஹீரோயினுடன் ஷாட் இருக்கிறதா என்றும் தன்னுடைய முகம தெரியுமா என்றும் கேள்வி எழுப்பியதாக தற்போது கூறியுள்ளார்.
மறக்க முடியாத சம்பவம்: இதையடுயத்து அத்தகைய ஷாட் எடுக்கப்பட்டதாகவும் மாலை 6 மணியளவில் அந்த காட்சி படமாக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது தன்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் என்றும் அவர் கூறியுள்ளார். தொடர்ந்து அறிமுக இயக்குநர்களுடன் இணைந்து படங்களை கொடுத்து வருகிறார் கவின். அறிமுக இயக்குநர்களுக்குத்தான் பொதுவாக புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் என்றும் கவின் சுட்டிக் காட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications











