Kavin: திரிஷாவா.. நயன்தாராவா.. இவ்வளவு டஃப் கேள்விக்கு கூலாக பதில் சொன்ன கவின்!
சென்னை: நடிகர் கவின் கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகராக கவனத்தை ஈர்த்து வருகிறார். அடுத்தடுத்து லிஃப்ட், டாடா, ஸ்டார் ஆகிய படங்கள் கவின் நடிப்பில் கவனத்தைப் பெற்ற நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தீபாவளி கொண்டாட்டமாக கவின் நடிப்பில் பிளடி பெக்கர் படம் ரிலீசாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் சிவபாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தயாரித்துள்ளார். இதன் மூலம் அவர் தயாரிப்பாளராகவும் கோலிவுட்டில் தனது என்ட்ரியை கொடுத்துள்ளார். இந்த படம் பிளாக் காமெடியை மையமாக வைத்து வெளியான சூழலில் ரசிகர்களை கவர்ந்து சிறப்பான வசூலை பெற்று வருகிறது.

நடிகர் கவின்: நடிகர் கவின் அடுத்தடுத்து ரசிகர்களை கவர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் லிப்ஃட், டாடா, ஸ்டார் உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்து ரசிகர்களை கதைக்களம் மற்றும் தன்னுடைய நடிப்பால் கட்டிப்போட்டு தன்னை மிகச் சிறப்பான நடிகராக வெளிப்படுத்தி உள்ளார். இதனிடையே தீபாவளி ரிலீசாக கவின் நடிப்பில் வெளியாகி உள்ளது பிளடி பெக்கர் படம். இந்த படத்தை இயக்குநர் சிவபாலன் இயக்கியுள்ளார். படத்தில் பிச்சைக்காரராக நடித்துள்ளார் கவின். பிளாக் காமெடியை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படம் ரசிகர்களை சிறப்பாக ஈர்த்து வருகிறது.
பிளடி பெக்கர் படம்: இந்த படத்தை முதல் முறையாக இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தயாரித்துள்ளார். முன்னதாக இந்த படத்தின் பிரமோஷனுக்காக கவினுடன் நெல்சன் மற்றும் இயக்குனர் சிவபாலன் இருவரும் இணைந்து தொடர்ந்து பயணித்து வந்தனர். இந்நிலையில் தற்போது கவின் தனியாக கொடுத்துள்ள அடுத்தடுத்த பேட்டிகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் அவரிடம் திரிஷாவா அல்லது நயன்தாராவா யாரை பிடிக்கும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த கவின், நடிகை திரிஷாவை நீண்ட நாட்களாக தனக்கு பிடிக்கும் என்று பதிலளித்துள்ளார்.
திரிஷாவா.. நயன்தாராவா?: நயன்தாராவுடன் தற்போது புதிய படத்தில் நடித்து வரும் கவின் நயன்தாராவும் மிகச் சிறப்பாக பழகுவதாக தெரிவித்துள்ளார். முன்னதாகவே விக்னேஷ் சிவனுடன் பழகிவந்ததாகவும் ஆனால் நயன்தாராவுடன் பழகும் சந்தர்ப்பம் தற்போது கிடைத்துள்ளதாகவும் கவின் கூறியுள்ளார். நயன்தாரா சூட்டிங்கின்போது கிடைக்கும் சிறிய சிறிய சந்தர்ப்பங்களில்கூட தன்னுடைய குடும்பத்தினருக்காக நேரத்தை செலவிட்டு வருவதாகவும் நண்பர்களுடன் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது நயன்தாராவும் தனக்கு மிகச்சிறந்த நண்பராக மாறியுள்ளதாகவும் கவின் கூறியுள்ளார்.
அடுத்தடுத்த படங்கள்: முன்னணி நடிகர்களிடம் வழக்கமாக எப்போதும் திரிஷா அல்லது நயன்தாரா யாரை பிடிக்கும் என்ற கேள்வி கேட்கப்படுவதுண்டு. அவர்களும் இதற்கு உற்சாகமாக பதிலளிக்கும் நிலையில் தற்போது கவினின் பதில் ரசிகர்களிடையே கவனத்தை பெற்றுள்ளது. கவின் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. அடுத்ததாக மாஸ்க் படம் ரிலீசாகவுள்ளது. நிற்கக் கூட நேரமில்லாமல் படங்களில் கமிட்டாகி அவர் நடித்து வருகிறார். நயன்தாராவுடன் கவின் நடித்து வரும் படத்தின் ஷூட்டிங்கும் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்தப் படம் ரசிகர்களை கவரும் வகையில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











