Bloddy Beggar: ஓகேவா பண்ணிடுவியா கேள்வி கேட்ட நெல்சன்.. கவின் ரியாக்ஷன்.. பிளடி பெக்கர் உருவான கதை!
சென்னை: நடிகர் கவினின் அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகின்றன. அந்த வகையில் டாடா, ஸ்டார் படங்களை தொடர்ந்து தற்போது நெல்சன் திலிப்குமார் தயாரிப்பில் சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் பிளடி பெக்கர் படத்தில் ஹீரோவாக இணைந்துள்ளார் நடிகர் கவின். இந்த படத்தின் டீசர், போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை சிறப்பாக கவர்ந்துள்ளன.
இந்நிலையில் இன்றைய தினம் பிளடி பெக்கர் படத்தின் ட்ரெயிலர் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் படம் ரிலீசாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியையும் சென்னையில் படக்குழுவினர் நடத்தியுள்ளனர். இதில் படத்தின் தயாரிப்பாளரான இயக்குனர் நெல்சன் திலீப்குமார், இயக்குனர் சிவபாலன் முத்துக்குமார், நடிகர் கவின் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு படத்தின் சுவாரசியங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

நடிகர் கவின்: நடிகர் கவினின் டாடா. ஸ்டார் படங்களை அதன் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக கவின் நடிப்பில் உருவாகியுள்ள படம் பிளடி பெக்கர். இந்த படத்தின்மூலம் சிவபாலன் முத்துக்குமார் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இதே போல பிரபல இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இத்தகைய சிறப்புகளுடன் உருவாகியுள்ள பிளடி பெக்கர் படத்தில் நடிகர் கவின் ஹீரோவாக இணைந்துள்ளார். இன்றைய தினம் இந்த படத்தின் ட்ரெயிலர் ரிலீசாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும் படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியும் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது.
அடுத்தடுத்த பிரமோஷன்கள்: படத்தின் ரிலீஸுக்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களை படக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது நடந்தள்ள பிளடி பெக்கர் படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் நடிகர் கவின், தயாரிப்பாளர் நெல்சன் திலீப்குமார், படத்தின் இயக்குனர் சிவபாலன் முத்துக்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு பிளடி பெக்கர் படம் உருவான விதம் உள்ளிட்ட பல விஷயங்களை பகிர்ந்துள்ளனர். இந்த படத்தில் தான் கதையையே கேட்கவில்லை என்றும் படத்தின் சூட்டின் உள்ளிட்ட டீடெயிலை மட்டுமே கேட்டதாகவும் அந்த அளவிற்கு இயக்குநர்மீது நம்பிக்கை இருந்ததாகவும் கவின் தன்னுடைய பேச்சின்போது குறிப்பிட்டுள்ளார்.
ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கவின் பேச்சு: நெல்சன் திலீப்குமார், சிவபாலன் முத்துக்குமார் உள்ளிட்டவர்களுக்கு இது முதல் முயற்சி என்பதால் இந்த படத்தை மேலும் சிறப்பாக கொடுக்க வேண்டும் என்பதில் தான் தீவிரமாக செயல்பட்டதாகவும் கவின் கூறியுள்ளார். முன்னதாக இந்தப் படத்திற்காக நடத்தப்பட்ட லுக் டெஸ்ட் உள்ளிட்டவற்றின் மூலம் படம் குறித்த ஒரு நம்பிக்கை தனக்கு ஏற்பட்டதாகவும் கவின் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த படம் குறித்து தன்னிடம் பேசிய நெல்சன் திலீப்குமார் பண்ணிடுவியாடா என்று மட்டுமே தன்னிடம் கேட்டதாகவும் தான் பண்ணிடுவேன் என்று தலையாட்டியதாகவும் இது மட்டும் தான் தங்களுக்குள் துவக்கத்தில் படம் குறித்த பேச்சாக இருந்ததாகவும் நடிகர் கவின் கூறியுள்ளார்.
இயக்குநர் குறித்து இயக்குநர் நெல்சன்: அந்த வகையில் தன்மீதும் தன் நடிப்பு மீதும் நெல்சன் திலீப் குமார் வைத்திருந்த நம்பிக்கையை காப்பாற்ற தான் முழு வீச்சில் செயல்பட்டதாகவும் கவின் மேலும் கூறியுள்ளார். தான் நடிப்பில் செயல்படுவதற்கு முன்னதாக மாதத்தில் இவ்வளவு சம்பாதித்தால் போதும் என்ற மனநிலையிலேயே செயல்பட்டதாகவும் அடுத்தடுத்து தனக்கு அமைந்த படங்கள் தன்னுடைய நம்பிக்கையை ஏற்றியதாகவும் கவின் மேலும் தெரிவித்துள்ளார். இதனிடையே நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் நெல்சன், இந்தப் படத்தின் இயக்குநர் தன்னுடன் கோலமாவு கோகிலா படத்திலிருந்தே இணைந்து பணியாற்றி வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
தயாரிப்பாளரான கதை: பிளடி பெக்கர் படத்தின் கதையை சிவபாலன் கூறியபோது, தான் அதில் சின்ன சின்ன கரெக்ஷன்களை கூறியதாகவும் தொடர்ந்து தன்னையே தயாரிக்க சிவபாலன் கேட்டதாகவும் நெல்சன் வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் அந்த நேரத்தில் ஜெயிலர் படத்தை தான் இயக்கிக் கொண்டிருந்ததாகவும் ஜெயிலர் சிறப்பாக ஓடினால், தான் இந்தப் படத்தை தயாரிப்பதாக சிவபாலனுக்கு தான் உறுதியளித்ததாகவும் நெல்சன் கூறிய நிலையில் அதுவரை சிவபாலன் முத்துக்குமார் காத்திருந்ததாகவும் நெல்சன் பாராட்டு தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











