Kavin Marriage: கவின் திருமணம்.. மணமகள் எப்படி இருக்காருன்னு பாருங்க.. வாழ்த்திய புகழ்!

சென்னை: தமிழ் சினிமாவில் இளம் ஹீரோவாக வலம் வரும் நடிகர் கவின் திருமணம் இன்று நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்திய விஜய் டிவி புகழின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையனாக அறிமுகம் ஆன போதே கவினுக்கு ஏகப்பட்ட இளம் பெண்கள் ரசிகைகளாக மாறினர். அதன் பின்னர் அந்த சீரியலில் ஹீரோவாகவே கவின் மாறினார்.

Actor Kavin ties the knot to his lover Monicka photos trending

நட்புன்னா என்னானு தெரியுமா படத்தில் நடித்த கவின் பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டார். அப்போது அந்த வீட்டில் போட்டியாளராக கலந்து கொண்ட லாஸ்லியாவை உயிருக்கு உயிராக கவின் காதலித்தார். ஆனால், நிகழ்ச்சி முடிந்ததும் அவர்கள் காதல் அப்படியே பிரேக்கப் ஆனது.

கவின் கல்யாணம்: பிகில் படத்தில் நடித்த அம்ரிதா ஐயருடன் ஜோடி போட்டு கவின் நடித்த லிப்ட் திரைப்படம் ஓடிடியில் வெளியான நிலையிலும், மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த ஆண்டு பீஸ்ட் படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த அபர்ணா தாஸுடன் இணைந்து டாடா படத்தில் நடித்த கவினுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்தது.

இந்நிலையில், பள்ளியில் பணியாற்றி வரும் தனது காதலியான மோனிகாவுடன் ஆகஸ்ட் 20ம் தேதி கவினுக்கு திருமணம் நடைபெறும் என தகவல்கள் வெளியான நிலையில், தற்போது கவின் திருமணம் நடைபெற்ற நிலையில், திருமண புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Actor Kavin ties the knot to his lover Monicka photos trending

மணக்கோலத்தில் மாஸ் காட்டிய கவின்: ஆகஸ்ட் 20ம் தேதியான இன்று திருமண நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், அதில் கலந்து கொண்ட விஜய் டிவி புகழ் கவின் மற்றும் மோனிகா தம்பதியினருக்கு பூங்கொத்து கொடுத்த புகைப்படங்கள் வெளியாகின.

கூடிய சீக்கிரமே மேலும், அதிகமான கவின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் கவினுக்கு கல்யாணம் ஆனது தெரிய வந்த நிலையில், சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் கவினுக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பட்டு வேட்டியில் நடிகர் கவின் மாப்பிள்ளை கோலத்தில் செம அழகாக இருக்க அவரது பக்கத்தில் மாலையும் கழுத்துமாக மோனிகாவும் செம க்யூட்டாக இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X