மகேந்திர சிங் தோனி ஸ்டைலில் ரிட்டையர்மென்ட் அறிவித்த நடிகர் கவின்.. குழப்பத்தில் ரசிகர்கள்!

சென்னை: நடிகர் கவின், தோனி ஸ்டைலில் ரிட்டையர்மென்ட் அறிவித்தது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

Recommended Video

Dhoni styleல Bigg Boss Kavin Retirement

நடிகர் கவின் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள், தாயுமானவன், சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பெரும் பிரபலமானார்.

தொடர்ந்து கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார் நடிகர் கவின் இதில் 90 நாட்களுக்கு மேல் இருந்த அவர், வெற்றி வாய்ப்பை உதறி விட்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

பட்டப் பெயர்

பட்டப் பெயர்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது சமூக வலைதளங்களில் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்தார். சேரன், கஸ்தூரி என சக போட்டியாளர்களுக்கு பட்டப் பெயர் வைத்து கேலி செய்தார். இதனால் விமர்சனங்களுக்கு ஆளானார் கவின்.

லிஃப்ட் படம்

லிஃப்ட் படம்

இருப்பினும் ரசிகர்களின் ஆதரவை பெற்ற கவின் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படத்தில் நடித்த கவின், தற்போது லிஃப்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள கவின் அவ்வப்போது எதையாவது ஷேர் செய்வது, டிவிட்டுவது என இருந்து வருகிறார்.

கவின் ஓய்வு?

கவின் ஓய்வு?

இந்நிலையில் நடிகர் கவின், இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் தோனி ஸ்டைலில் ஒரு வீடியோவை ஷேர் செய்து ஓய்வை அறிவித்துள்ளார். அதில் இதுவரை உங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி. 20:24 மணி முதல் என்னை ஓய்வு பெற்றவராக கருதுகிறேன் " என எம்.எஸ். தோனி பாணியில் பதிவிட்டிருந்தார்.

ரசிகர்கள் குழப்பம்

ரசிகர்கள் குழப்பம்

கவினின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர். ஆனால் கவின் வெளியிட்ட வீடியோவை பார்த்த பின்னர் அவரது ரசிகர்களும் ஃபாலோயர்களும் இவ்வளவு தானா என சிரித்தனர். ஏனெனில் கவின் ஷேர் செய்த வீடியோ மொபைல் கேம் ‘பப்ஜி'யின் வீடியோ கேப்சர் ஆகும்.

கவினும் கவலை

கவினும் கவலை

மத்திய அரசு பப்ஜி கேமுக்கு தடைவிதித்திருப்பதற்காக இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.பல இளைஞர்களைப் போலவே, கவினும் இந்த விளையாட்டின் மிகப் பெரிய ரசிகர் போல. அதனால்தான் அந்த விளையாட்டுக்கான தடை அவரை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X