Bloddy Beggar movie: ஒரு ஊர்ல ஒரு பிச்சைக்காரன் இருந்தானாம்.. வெளியானது பிளடி பெக்கர் பட ட்ரெயிலர்!

நடிகர் கவின் வளர்ந்து வரும் நடிகராக அடுத்தடுத்து படத்தை மூலம் கவனம் இவரது லிப்ட் டாடா படங்கள் மிக சிறப்பாக அமைந்த நிலையில் சமீபத்தில் இவரது ஸ்டார் படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில் தற்போது குமார் தயாரிப்பில் இயக்கத்தில் ப்ளடி பெக்கர் படம் ரிலீசுக்கு தயாரிக்கும் தயாராகுள்ளது வரும் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி ரிலீஸ் ஆக வெளியாக உள்ள இந்த படத்தின் டீசர் முன்னதாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருந்தது இந்நிலையில் இன்னும் சில தினங்களில் உள்ள நிலையில் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி மாஸ் காட்டியுள்ளது.

Actor Kavin s Bloddy Beggar movie official trailer released

பிளடி பெக்கர் படம்: நடிகர் கவின் அடுத்தடுத்த படங்களில் கவனத்தை ஈர்த்து வெற்றியையும் கொடுத்து வருகிறார். அவரது டாடா படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்த நிலையில் அடுத்ததாக வெளியான ஸ்டார் படமும் சிறப்பான வரவேற்பை அவருக்கு பெற்றுக் கொடுத்துள்ளது. இந்த படங்களை தொடர்ந்து தற்போது இயக்குனர் நெல்சன் திலிப் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள பிளடி பெக்கர் படத்தில் நடித்து முடித்துள்ளார் கவின். படத்தை இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கியுள்ளார். இது அவரது அறிமுக படமாக அமைந்துள்ளது. இந்தப் படத்தில் கவின், உண்மையான பிச்சைக்காரரை பிரதிபலிக்கும் வகையில் காணப்படுகிறார்.

பிச்சைக்காரராக கவின்: கை, கால் இல்லாதவராகவும் கண் தெரியாதவராகவும் கவின் பிச்சை எடுப்பதாக இந்த கேரக்டர் அமைந்துள்ளது. ஆனால் ஒரு கட்டத்தில் சாவு ஊர்வலத்தின் இசையை கேட்டு அவர் தன்னை அறியாமல் எழுந்து நின்று தன்னுடைய கால்களின் மூலம் டான்ஸ் ஆடுவதாகவும் முன்னதாக வெளியான டீசரில் காட்சிகள் அமைந்திருந்தன. இந்நிலையில் இன்றைய தினம் இந்த படத்தின் ட்ரெயிலர் ரிலீசாகியுள்ளது. இதில் மிகப்பெரிய அரண்மனையில் கவின் இருப்பதாகவும் அவரை வில்லன் ஆட்டுவிப்பதாகவும் காணப்படுகிறது. இதனிடையே பிச்சைக்காரனின் காட்சிகளும் இந்த ட்ரெய்லரில் சிறப்பாக இணைக்கப்பட்டுள்ளது.


தீபாவளி ரிலீஸ்: வரும் தீபாவளியை ஒட்டி அக்டோபர் 31ம் தேதி ப்ளடி பெக்கர் படம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி படத்தின் ப்ரோமோஷன்கள் மிகவும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நடிகர் கவின், தயாரிப்பாளர் நெல்சன் திலீப்குமார், இயக்குனர் சிவபாலன் முத்துக்குமார் மற்றும் நடிகர் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் அடுத்தடுத்து பிரமோஷன்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஜெயம் ரவியின் பிரதர், சிவகார்த்திகேயனின் அமரன் உள்ளிட்ட படங்களும் தீபாவளி ரேசில் உள்ள நிலையில், காமெடி கலாட்டாவாகவும் திரில்லர் பாணியிலும் உருவாகியுள்ள பிளடி பெக்கர் படம் இதில் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

பிளடி பெக்கர் ட்ரெயிலர்: வளர்ந்துவரும் நடிகராக கவினின் அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில் பிளடி பெக்கர் படமும் அந்த வரிசையில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது மாஸான படத்தின் ட்ரெயிலர் ரிலீஸ் ஆகியுள்ளது. இது பல்வேறு கேள்விகளையும் எதிர்பார்ப்புகளையும் ரசிகர்களிடையே எழுப்பியுள்ளது. கவினின் கதைத்தேர்வு அடுத்தடுத்து சிறப்பாக அமைந்துவரும் நிலையில் இந்தப் படமும் கவினின் முந்தைய படங்கள் போலவே வித்தியாசமான கதைக்களத்தில் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X