சிவகார்த்திகேயன், ஜெயம் ரவிக்கு போட்டி? களமிறங்கிய கவின்.. பிளடி பெக்கர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சென்னை: விஜய் டிவியின் கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி போன்ற சீரியல்களில் நடித்து டீன் ஏஜ் பெண்களின் மனதில் இடம் பிடித்த கவின், தனக்கு தகுந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் இயக்குநர் நெல்சன் தயாரிப்பில் உருவாகி உள்ள 'ப்ளடி பெக்கர்' என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் கவின் நடிப்பில் 2021ம் ஆண்டு வெளியான லிஃப்ட் திரைப்படம் இவருக்கு பெயர் சொல்லும் திரைப்படமாக அமைந்தது. அதன் பின், கவின் நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் ரசிகர்களின் வரவேற்போடு ஹிட் லிஸ்ட்டில் இணைந்துள்ளது. கவின் ஜோடியாக பீஸ்ட் பட புகழ் அபர்னா தாஸ், முக்கியமான கேரக்டர்களில் பாக்யராஜ், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

கொண்டாடிய ரசிகர்கள்: டாடா படத்தை இளசுகள் முதல் பெருசுகள் வரை ரசித்து ரசித்துப் பார்த்தனர். இந்த படத்தை பார்த்த நடிகர் கமல்ஹாசன் கவின் உள்ளிட்ட படக்குழுவினரை வெகுவாக பாராட்டினார். டாடா படத்தின் வெற்றியால் நல்ல ஹீரோ என தனக்கு கிடைத்த பெயரை சரியாக பயன்படுத்தி சிவகார்த்திகேயன் போல் ஆகவேண்டும் என்று திட்டம் போட்ட இவர், நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
ப்ளடி பெக்கர்:இதைத்தொடர்ந்து, கவின் நடிப்பில் வெளியான ஸ்டார் படமும் பெரிய அளவில் வெற்றி பெற்று இவரின் தரத்தை உயர்த்தியது. ஸ்டார் படத்தைத் தொடர்ந்து கவின் நெல்சன் திலிப்குமார் தயாரிக்கும் பிளடி பெக்கர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை நெல்சனிடம் உதவி இயக்குநராக இருந்த சிவபாலன் இயக்கியுள்ளார். இத்திரைப்படம் தீபாவளியன்று வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தீபாவளி ரேசில்: சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படமும், நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி உள்ள 'லக்கி பாஸ்கர்' படமும், ஜெயம் ரவி நடித்துள்ள பிரதர் திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது தீபாவளி ரேஸில் கவின் 'ப்ளடி பெக்கர்' இணைந்துள்ளது. இந்த மூன்று படத்தில் எந்த படம் வசூலை அள்ளும் என்று பொருத்து இருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











