Bloody Beggar box office: எதிர்பார்ப்பை கிளப்பிய ப்ளெடி பெக்கர்..இரண்டாம் நாள் வசூல் விவரம்!
சென்னை: இயக்குநர் சிவபாலன் இயக்கத்தில் நடிகர் கவின் நடிப்பில் தீபாவளி திருநாள் அன்று தியேட்டரில் வெளியானத் திரைப்படம் தான் ப்ளெடி பெக்கர். கவினின் வித்தியாசமான நடிப்பில் வெளியான இந்த படத்தில் ரெடின் கிங்க்ஸி, சுனில் சுகதா, அக்ஷயா, திவ்யா, தனுஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் இரண்டாம் நாள் வசூல் எவ்வளவு என்று பார்க்கலாம்.
கவினின் நடிப்பு நாளுக்கு நாள் மெருகெறிக்கொண்டே செல்கிறது என்று தான் சொல்ல வேண்டும், கடந்த ஆண்டு வெளியான டாடா படத்தில் காதலன், கணவன், அப்பா என தனது அடுத்தடுத்து கேரக்டரில் நடித்து ஸ்கோர் செய்திருந்தார். டாடா படத்தை தொடர்ந்து, ஸ்டார் படத்தில் நடித்திருந்தார் அந்த படமும் கவினுக்கு ஒரு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. நல்ல கதை அம்சம் உள்ள கதையை தேர்வு செய்து நடித்து வரும் கவினின் நடிப்பில் வெளியான ப்ளெடி பெக்கர் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

ப்ளெடி பெக்கர் படத்தின் கதை: உழைக்க சோம்பேறித்தனத்துடன் இருப்பவராக கவின். தனக்கு கண் பார்வை தெரியாது, காது கேட்காது என ஒவ்வொரு முறையும் ஒரு பொய்யைச் சொல்லி ஏமாற்றி பிச்சை எடுக்கிறார். கவின் தன்னுடன் பெற்றோரால் கைவிடப்பட்ட சிறுவனை வளர்த்து வருகிறார். ஆடம்பரமான மாளிகை ஒன்றில் ஒரு நாளாவது வாழ்ந்துவிட வேண்டும் என்ற ஆசையோடு வாழ்ந்து வருகிறார் கவின். அந்த ஆசை நிறைவேறும் வகையில் ஒரு சந்தர்ப்பம் வருகிறது. அதாவது அரண்மனையில் அன்னதானம் போடுவதாக தகவல் வர அங்கு செல்கிறான் கவின். சாப்பிட்டு முடித்த கையுடன் யாருக்கும் தெரியாமல் அந்த அரண்மனைக்குள் நுழைந்து விடுகிறார். அந்த கட்டிடத்தின் பிரம்மாண்டம் மற்றும் அழகை பார்த்து மயங்கிய கவின் யாருக்கும் தெரியாமல் அரண்மனையில் தங்குகிறார்.
மீதிக்கதை: அந்த மாளிகையின் வாரிசுகள் சொத்தைப் பிரித்து கொள்ளும் நோக்கத்தோடு அரண்மனைக்குள் நுழைகிறார்கள். அந்த வாரிசுகளின் அப்பாவுக்கு இன்னொரு வாரிசு இருக்கிறது. அந்த வாரிசுக்கே சொத்தின் பெரும்பகுதியை உயிலாக எழுதி வைத்திருக்கிறார். இதனால், பதறிப்போன மற்ற வாரிசுகள் ஒருவனை ஏற்பாடு செய்து அவனுக்கு சொத்து எழுதிக் கொடுப்பது போல கொடுத்து பின்னர் வாங்கிக் கொள்ளலாம் என்று திட்டம் போடும் நேரத்தில் அரண்மனையில் பதுங்கி இருக்கும் கவின் அவர்களின் கண்ணில் படுகிறான். இதில் கவின் சந்திக்கும் பிரச்சினைகள் என்னென்ன? வாரிசுகளுக்கு சொத்து கிடைத்ததா? என்பது தான் ப்ளெடி பெக்கர் படத்தின் கதை.
இரண்டாம் நாள் வசூல்: இப்படத்தை அறிமுக இயக்குனரான சிவபாலன் என்பவர் இயக்கி உள்ளார் இவர் இயக்குனர் நெல்சன் திலீப்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார். மேலும், இப்படத்தின் மூலம் நெல்சன் திலீப்குமார் தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். தீபாவளி பண்டிகைக்கு தியேட்டரில் வெளியான Bloody Beggar திரைப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று முதல் நாளில் உலகளவில் ரூ.2,2 கோடி வரை வசூல் செய்துள்ளது. இதையடுத்து படத்தின் இரண்டாம் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி படம் முதல் நாளில் 75லட்சத்தை வசூலித்துள்ளது. மொத்தத்தில் படம் வெளியான இரண்டு நாட்களில் 2.99கோடியை வசூலித்துள்ளது. இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால் படத்தின் வசூல் கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











