Actor Kavin: ரிலீசுக்கு தயாராகும் கவினின் அடுத்தப்படம்.. தீபாவளி ரிலீஸ்!
சென்னை: நடிகர் கவின் -இயக்குனர் இளன் கூட்டணியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி உள்ளது ஸ்டார் படம். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் கவினின் நடிப்பு சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுள்ளது. வார இறுதி நாட்களான கடந்த மூன்று நாட்களில் இந்த படத்தின் வசூல் சிறப்பாக அமைந்துள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் கவின் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் கிஸ் படம் தீபாவளிக்கு ரிலீசாகவுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் இன்னும் சில தினங்களில் நிறைவடையவுள்ளதாகவும் அடுத்ததாக போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் துவங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. விரைவில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

நடிகர் கவின்: நடிகர் கவின் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்டார் படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்தப் படத்தில் நடிகனாக ஆசைப்படும் கலை என்ற கேரக்டரில் நடித்துள்ளார் கவின். படத்தில் அவருடன் ப்ரீத்தி முகுந்தன், அதிதி போஹங்கர், லால், கீதா கைலாசம் உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ட்ரெயிலர் படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை கூட்டியிருந்தது. இளன் இயக்கத்தில் வெளியான ஸ்டார் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. இருந்தபோதிலும் கவின் நடிப்பு சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.
இயக்குநர் இளன்: முன்னதாக பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் இளன், ஸ்டார் படத்தை இயக்கியுள்ளார். படத்தின் முதல் பாகம் சிறப்பாக அமைந்துள்ளதாகவும் இரண்டாவது பாகம் சிறிது இழுவையாக அமைந்துவிட்டதாகவும் முன்னதாகவே யூகிக்கக் கூடிய காட்சிகள் இரண்டாவது பாகத்தில் அதிகமாக உள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்தப் படத்தை வெற்றி திரையரங்கில் ரசிகர்களுடன் இணைந்து கண்டு களித்திருந்தார் கவின். கவின் நடிப்பில் முன்னதாக டாடா, லிப்ட் ஆகிய படங்கள் வெளியாகி கவினுக்கு சிறப்பாக அமைந்திருந்தன. இந்த படங்கள் கொடுத்த ஹைப் காரணமாக ஸ்டார் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
கலவையான விமர்சனங்கள்: ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஸ்டார் படம் சரியான அளவில் பூர்த்தி செய்யவில்லை என்ற விமர்சனங்கள் தான் தற்போது முன்வைக்கப்படுகின்றன. விஜய் டிவியின் கனா காணும் காலங்கள், பிக் பாஸ் என அடுத்தடுத்து தன்னை ரசிகர்களுக்கு சிறப்பாக அறிமுகப்படுத்தியிருந்தார் கவின். இந்நிலையில் தற்போது மிகவும் விரைவாக ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகராக பெயர் பெற்றுள்ளார். டாடா படத்தின் அதிரிபுதிரி வெற்றியை தொடர்ந்து இவர் தன்னுடைய சம்பளத்தை அதிகமாக உயர்த்தி உள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகிவரும் கவின், தற்போது நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் கிஸ் படத்தில் நடித்து வருகிறார்.
கிஸ் பட ரிலீஸ் அப்டேட்: கிஸ் படத்தின் சூட்டிங் இன்னும் பத்து தினங்களில் நிறைவடைய உள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. ரோமியோ பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்தப் படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. படத்தில் கவினுக்கு ஜோடியாக ப்ரீத்தி அஸ்ரானி இணைந்துள்ளார். அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகிவரும் கவின் நடிப்பில் அடுத்ததாக பிளடி பெக்கர் படம் அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications











