Star movie: கவினின் ஸ்டார் படத்தின் அதிகாரப்பூர்வ வசூல்.. 3 நாளில் இத்தனை கோடியா!
சென்னை: நடிகர் கவின் லிப்ஃட், டாடா படங்களின் மூலம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் விருப்ப நாயகனாக மாறியுள்ளார். இந்நிலையில் இளன் இயக்கத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஸ்டார் படம் கவின் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்தின் கடந்த 3 தினங்களுக்கான வசூல் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் கவினுடன் அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன், லால், கீதா கைலாசம் ஆகியோர் இணைந்து நடித்துள்ள சூழலில் படத்தின் கதைக்களத்தை சிறப்பான திரைக்கதையால் அனைவரையும் கவரும் வகையில் உருவாக்கியுள்ளார் இளன். ஆயினும் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது.

நடிகர் கவின்: நடிகர் கவினின் ஸ்டார் படம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சர்வதேச அளவில் ரிலீசாகி ரசிகர்களின் வரவேற்பையும் சிறப்பான வசூலையும் பெற்று வருகிறது. இந்தப் படத்தில் கவினுடன் அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், லால், கீதா கைலாசம் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். பியார் பிரேமா காதல் படம் மூலம் கவனத்தை பெற்ற இயக்குனர் இளன் இந்த படத்தை இயக்கியுள்ளார். முன்னேற துடிக்கும் நடிகராக கலை என்ற கேரக்டரில் கவின் நடித்திருந்தார். மெயின் கேரக்டர்களுக்கு மட்டுமில்லாமல் துணை கேரக்டர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து படத்தில் அவர்களது கேரக்டர்களை சிறப்பாக்கியுள்ளார் இளன்.
ஸ்டார் படம்: இந்தப் படம் ரசிகர்களை சிறப்பாக கவர்ந்து மூன்று நாட்களில் மிகச் சிறப்பான வசூலை பெற்றுள்ளதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. படம் கடந்த மூன்று நாட்களில் 15 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 12 கோடி ரூபாய் என்ற சூழலில், படமும் மூன்று நாட்களிலேயே பட்ஜெட்டை தாண்டி வசூலித்துள்ளது. கடந்த ஆண்டில் கவின் நடிப்பில் வெளியான டாடா படம் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் ஈட்டிய சூழலில் இந்த படத்தின் மொத்த வசூலே 20 கோடி ரூபாய் தான்.

ஸ்டார் படத்தின் அதிகாரப்பூர்வ வசூல்: அந்த வகையில் தற்போது மூன்று நாட்களிலேயே கவினின் ஸ்டார் படம் 15 கோடி ரூபாய் வசூலித்துள்ளது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. தொடர்ந்து படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் சிறப்பாக ஓடிவரும் சூழலில், படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம். இது குறித்து தயாரிப்பு தரப்பு தற்போது உற்சாகத்தை பதிவு செய்துள்ளது. லிப்ட், டாடா படங்களை தொடர்ந்து கவின் நடிப்பில் ஸ்டார் படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் ட்ரெயிலர் முன்னதாக வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை படத்திற்கு கொடுத்த சூழலில் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
பாராட்டுக்களை பெற்ற கவின்: இருந்த போதிலும் இந்த படத்தில் கவினின் நடிப்பு மிகப்பெரிய பாராட்டுகளை பெற்றுள்ளது. இந்நிலையில் வார இறுதி நாட்களான கடந்த மூன்று நாட்களில் இந்த படத்தின் வசூல் 15 கோடிகளை தாண்டியுள்ளது படக்குழுவினரை உற்சாகப்படுத்தியுள்ளது. இதையடுத்து தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத இடத்தை கவின் பிடித்துள்ளார். அடுத்தடுத்த படங்களிலும் நடித்து வருகிறார். நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் கவின் நடித்துவரும் கிஸ் படத்தின் சூட்டிங் இன்னும் சில தினங்களில் நிறைவடையவுள்ளது. படம் தீபாவளியையொட்டி ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











