கயல் பட நடிகரால் வாக்குச் செலுத்த முடியவில்லை.. ஒரே வருத்தம்.. என்ன நடந்தது?
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026 அமைதியாகவும் வெகு சிறப்பாகவும் நடைபெற்ற முடிந்தது. SIRக்குப் பிறகு நடைபெற்ற தேர்தல் என்பதால் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு அளவைவிட இந்த ஆண்டு வாக்குப்பதிவு அதிகம் நடைபெற்றுள்ளது.
பிரபலங்கள் பலரும் காலை முதல் மாலை வரை மிகவும் ஆர்வத்துடன் வாக்கு செலுத்தினர். அதேபோல் பொதுமக்களும் தொண்டர்களும் மிகவும் ஆர்வமாக வாக்கு செலுத்தினர். வெளியூர்களிலிருந்து குறிப்பாக வெளி மாநிலங்களில் இருந்து வெளிநாடுகளில் இருந்து எல்லாம் ஆர்வத்துடன் மக்கள் சாரை சாரையாக வந்து வாக்கு செலுத்திய தேர்தலாக 2026 ஆம் ஆண்டு தேர்தல் மாறி உள்ளது. இப்படி இருக்கையில் கயல் படத்தின் கதாநாயகன் ஆன நடிகர் சந்திரமௌலி அவரது வாக்கினை செலுத்த முடியவில்லை என்று வீடியோ வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் மிகவும் வருத்தத்துடன், "என்னால் வாக்குச் செலுத்த முடியவில்லை. வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் எஸ் ஐ ஆர் பணிகள் நடைபெற்ற போது முறையாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்தும், எனது பெயர் பட்டியலில் இல்லை என்று தெரிவித்துள்ளார்கள். மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது இன்று அந்த வீடியோவில் அவர் பேசி உள்ளார். நடிகர் கயல் சந்திர மௌலியால் வாக்கு செலுத்த முடியாதது குறித்த தகவல் திரைத்துறையில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications