நடிகர் கயல் சந்திரனுக்கு இன்று பிறந்த நாள்... ரசிகர்கள் வாழ்த்து !

சென்னை : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் கயல் சந்திரன் இப்பொழுது வெங்கட் பிரபு உள்ளிட்ட பல முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.

Recommended Video

ஸ்ரீதேவியிடம் நிறைய கற்றுக்கொண்டேன் | YAMINI CHANDER INTERVIEW | V-CONNECT | FILMIBEAT TAMIL

பிரபுசாலமன் இயக்கிய கயல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகனாக அறிமுகப்படுத்தப்பட்ட இவர் நடிகர் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து பல்வேறு குறும் படங்களில் நடித்திருக்கிறார்.

கயல் திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்த சந்திரனுக்கு பல்வேறு பாராட்டுக்கள் குவிந்த நிலையில் இப்பொழுது வெங்கட்பிரபு இயக்கி வரும் பார்ட்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் செப்டம்பர் 5ம் தேதியான இன்று இவர் தனது பிறந்த நாளை கொண்டாடி வருவதையொட்டி சமூக வலைதளங்களில் இவரது ரசிகர்கள் நண்பர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

அழகான காதலையும்

அழகான காதலையும்

2004 ஆம் ஆண்டு உலகையே ஆட்டிப்படைத்த மிகப்பெரிய பேரழிவாக உருவான சுனாமியையும், அழகான காதலையும் மையமாக வைத்து தமிழில் மிக பிரமாண்டமான முறையில் தத்ரூபமான காட்சிகளுடன் எடுக்கப்பட்ட கயல் திரைப்படம் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய அங்கீகாரத்தை பெற்று வருகிறது.

எந்த சாயலும் இல்லாமல்

எந்த சாயலும் இல்லாமல்

பிரபல ரேடியோ ஸ்டேஷன் ஒன்றில் பணியாற்றி வந்த சந்திரன் பிரபு சாலமன் இயக்கிய கயல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகனாக அறிமுகப்படுத்தப்பட்டார். அறிமுக நாயகன் என்ற எந்த ஒரு சாயலும் இல்லாமல் பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்திய சந்திரனுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததுடன் சிறந்த அறிமுக நடிகராக பல்வேறு விருதுகளும் வழங்கப்பட்டது.

திட்டம் போட்டு திருடுற கூட்டம்

திட்டம் போட்டு திருடுற கூட்டம்

தனது இயல்பான நடிப்பின் மூலம் முதல் படத்திலேயே மக்களை கவர்ந்த சந்திரன் அதை தொடர்ந்து ரூபாய், திட்டம் போட்டு திருடுற கூட்டம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பார்ட்டி

பார்ட்டி

காமெடி காட்சிகள் நிறைந்த கலகலப்பான திரைப்படங்கள் எடுப்பதற்கு பெயர்போன இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியிருக்கும் "பார்ட்டி" என்ற கலர்ஃபுல்லான திரைப்படத்தில் நடித்து இருக்கும் சந்திரன் இதைத்தொடர்ந்து கிரகணம், நான் செய்த குறும்பு, டாவு உள்ளிட்ட திரைப்படங்களில் வரிசையாக நடித்து வருகிறார்.

விஜே அஞ்சனாவை திருமணம்

விஜே அஞ்சனாவை திருமணம்

இவ்வாறு சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து தனது அட்டகாசமான நடிப்பின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வரும் சந்திரன், சன் மியூசிக்கில் பிரபல தொகுப்பாளராக பணியாற்றி வந்த விஜே அஞ்சனாவை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இத்தம்பதிக்கு ருத்ராக்ஷ் என்ற மகனும் உள்ளார்.

பிறந்தநாள்

பிறந்தநாள்

இவர் கயல் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானதை தொடர்ந்து பலரும் "கயல் சந்திரன்" என இன்றுவரை அடையாளத்தோடு அழைத்து வருகின்றனர். இந்நிலையில் செப்டம்பர் 5ம் தேதியான இன்று சந்திரன் தனது பிறந்தநாளை குடும்பத்தாருடன் இணைந்து மகிழ்ச்சியாக கொண்டாடி வருவதையொட்டி இவரது ரசிகர்கள் நண்பர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளங்களின் மூலம் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X