Ken karunas: வெற்றிமாறனோட லவ்.. எனக்கு கொடுத்த அடையாளம்.. கென் கருணாஸ் ஓபன்!

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், கென் கருணாஸ் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான விடுதலை 2 படம் தன்னுடைய அழுத்தமான கதைக்களம் மற்றும் திரைக்கதையால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது.

இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டில் ரிலீசாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாகியுள்ளது. படத்தில் குமரேசன் என்ற கான்ஸ்டபள் கேரக்டரில் நடிகர் சூரி இணைந்திருந்தார். இந்தப் படம் ஹீரோவாக அவரை அடுத்த தளத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இந்தப் படத்தின் வெற்றி தற்போது விடுதலை 2 படத்தை சாத்தியப்படுத்தியுள்ளது.

ken karunas viduthalai 2 movie vetri maaran


விடுதலை 2 படம்: நடிகர் விஜய் சேதுபதி, சூரி, மஞ்ச வாரியர், கென் கருணாஸ் ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகியுள்ளது விடுதலை 2 படம். வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி முதன்மை கேரக்டரில் நடித்துள்ளார். அவரது வாத்தியார் கேரக்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வரவேற்பை பெற்றுக் கொடுத்துள்ளது. இவரது ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். இவர்களது காதல், அதிரடி கதைக்களங்கள் ஆகியவை படத்திற்கு உயிர்ப்பை கொடுத்துள்ளன.

இளையராஜா இசை: இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டில் வெளியான நிலையில் படத்தில் சூரியின் குமரேசன் என்ற கான்ஸ்டபள் கேரக்டர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. இந்தப்படத்தில் அவருக்கும் பவானிஸ்ரீக்கும் இடையான காதலும் அதற்கு இளையராஜா கொடுத்திருந்த அழகான மெலடி பாடலும்கூட சிறப்பை சேர்த்திருந்தது. இந்தப் படம் மூலம் ஹீரோவாக தன்னை அடுத்த தளத்திற்கு கொண்டு சென்றுள்ளார் சூரி. விடுதலை 2 படத்திலும் அவரது கேரக்டர் மிகச்சிறப்பாக அமைந்திருந்தது. இதேபோல முதல் பாகத்தை போலவே விடுதலை 2 படத்திலும் இளையராஜாவின் இசை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

நடிகர் கென் கருணாஸ்: இந்தப்படத்தில் நடிகர் கென் கருணாஸ் கருப்பன் என்ற கேரக்டரில் நடித்துள்ளார். இவரது இந்தக் கேரக்டர் படத்தில் 10 நிமிடங்களே வந்த போதிலும் படத்தின் ஓட்டத்தில் மிகப்பெரிய பங்கை செய்துள்ளது. இந்த கேரக்டர் குறித்து தனது பேட்டியொன்றில் பேசியுள்ள கென் கருணாஸ், படத்தில் தன்னுடைய கேரக்டருக்கு இந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார். தான் நடிக்கும்போது தன்னுடைய கேரக்டர் இந்த அளவிற்கு ஸ்ட்ராங்கானது என்று தனக்கு தெரியாது என்றும் கூறியுள்ளார். படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் தன்னை மனதில் வைத்து பாராட்டி வருவது ஊக்கத்தை கொடுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.


வெற்றிமாறனின் லவ்: இந்தப்படத்தின் இயக்குநர் வெற்றிமாறன் தான் தன்னுடைய குரு என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ள கென் கருணாஸ், அவருடைய பெரிய ரசிகன் தான் என்றும் அவர் சினிமாவை அந்த அளவிற்கு லவ் செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதனால்தான் அவரால் உலகத்தரமான படைப்புகளை கொடுக்க முடிவதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார். வெற்றிமாறன் சார்தான் தன்னை சினிமாவில் அறிமுகப்படுத்தியதாகவும் அவரது படங்களில் தொடர்ந்து நடிப்பது பெருமையாக இருப்பதாகவும் மேலும் கூறியுள்ளார். கருணாஸ் மகன் கென் என்றில்லாமல், இந்தப்பையன் கருணாஸ் பையனாமே என்று மற்றவர்கள் ஆச்சர்யப்படுமவகையில் தன்னுடையஅடையாளத்தை வெற்றிமாறன் மாற்றியுள்ளது குறித்தும் கென் உற்சாகம் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X