வீட்ல அப்பா ரொம்ப ஸ்டிரிக்ட்... கென் கருணாஸ் அப்பா பத்தி என்ன சொல்லியிருக்காரு!
சென்னை : நடிகர் கருணாஸ் நந்தா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர்.
இவரது மகன் கென் கருணாசும் தற்போது அசுரன் படத்தில் நடித்து சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளார்.
தன்னுடைய அப்பா வீட்டில் எப்படி இருப்பார் என்பது குறித்து தற்போது கென் பகிர்ந்துள்ளார்.

நடிகர் கருணாஸ்
நடிகர் கருணாஸ் சினிமாவில் பாடகர் மற்றும் இசையமைப்பாளராக வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு வந்தவர். ஆனால் இவர் நடிகராக மாறினார். குறிப்பாக காமெடியில் கலக்கினார். நந்தா படத்தின்மூலம் காமெடி நடிகராக அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் காமெடி ராஜ்ஜியம் நடத்தினார்.

காமெடி கேரக்டர்கள்
காமெடி கேரக்டர்களில் தன்னை தனியாக அடையாளப்படுத்திக் கொண்ட இவர் காமெடி ஹீரோவாகவும் நடித்து அசத்தினார். அம்பாசமுத்திரம் அம்பானி போன்ற படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். அந்தப் படங்கள் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது. தொடர்ந்து ஹீரோ, காமெடியன் என்று நடித்துள்ளார்.

படங்களில் கவனம்
இந்நிலையில் அரசியலில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். மீண்டும் நடிப்பையும் தொடர்ந்தார். தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தனிப்பட்ட வாழ்க்கையில் கிரேஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

அசுரன் படத்தில் கென் கருணாஸ்
இவர்கள் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை இவரது மகன் கென் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். இவரும் தனது நடிப்புப் பயணத்தை துவங்கியுள்ளார். சமீபத்தில் வெளியான அசுரன் படத்தில் தனுஷின் மகனாக இவர் நடித்திருந்தார். ரசிகர்களின் வரவேற்பையும் பெற்றிருந்தார்.

அப்பாவின் குணம்
இந்நிலையில் கென் தனது அப்பாவின் குணம் குறித்தும் சினிமாவில் காமெடியனாக இருந்தாலும் வீட்டில் எப்படி நடந்து கொள்வார் என்பது குறித்தும் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். வீட்டில் கருணாஸ் மிகவும் ஸ்ட்ரிக்ட் என்றும் மிகவும் சீரியசாகவே இருப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருணாஸ் குறித்து மகன்
ஆனால் ஜாலி மூடில் இருந்தால் செமையாக ஃபன் செய்வார் என்றும் கென் தெரிவித்துள்ளார். திரைத்துறையில் காமெடியில் கலக்கிவரும் கருணாஸ் இவ்வாறு வீட்டில் நடந்துக் கொள்வது குறித்து வெளிப்படையாக கென் தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











