பிரமாண்ட இயக்குநரின் படத்தில் இணையும் கிச்சா சுதீப்? தீயாய் பரவும் தகவல்!

சென்னை: ஷங்கர் இயக்கவுள்ள ராம் சரண் படத்தில் நடிகர் சுதீப் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் என அழைக்கப்படுபவர் இயக்குநர் ஷங்கர். பல வெற்றிப் படங்களை கொடுத்த ஷங்கர் கடைசியாக இந்தியன் 2 படத்தை இயக்கினார்.

ஆனால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து மற்றும் கொரோனா அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களால் கடந்த ஆண்டு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

ஷங்கர் இயக்கம்

ஷங்கர் இயக்கம்

அதன் பிறகு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கவில்லை. இந்நிலையில் இயக்குநர் ஷங்கர் தெலுங்கு நடிகர் ராம்சரணை இயக்கவுள்ளார். இந்தப் படத்தை தற்காலிகமாக RC15 என குறிப்பிட்டு வருகின்றனர்.

சுதீப் நடிக்கவுள்ளார்?

சுதீப் நடிக்கவுள்ளார்?

இந்நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்காக கிச்சா சுதீப்பை படக்குழு அணுகியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக அவரிடம் கதை சொல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஹீரோயின் இவர்தான்

ஹீரோயின் இவர்தான்

இந்தியன் 2 படத்திற்காக பேசப்பட்ட தென் கொரிய நடிகையான சூஸி பே இந்தப் படத்தில் லீடிங் ரோலில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தை தில் ராஜூ மற்றும் ஷிரிஷ் ஆகியோர் தயாரிக்க உள்ளனர்.

அந்நியன் ரீமேக்

அந்நியன் ரீமேக்

ராம் சரண் நடிக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இதனிடையே இயக்குநர் ஷங்கர், அந்நியன் படத்தை இந்தியில் ரீமேக் செய்யவுள்ளார். இதில் ரன்வீர் சிங் லீடிங் ரோலில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X