மகள் திருமணம்.. நேரில் பத்திரிகை வைத்தும் வராத நடிகர்கள்.. கஷ்டமா இருக்கு.. ஃபீல் செய்யும் கிங் காங்

சென்னை: காமெடி நடிகர் கிங் காங்கின் மகள் கீர்த்தனாவுக்கு சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இருக்கும் பெசன்ட் நகர் முருகன் கோயிலில் திருமணம் நடந்தது. அதனையடுத்து ரிசப்ஷனும் நடந்தது. அதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எம்.பி.திருமாவளவன், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள். அதேசமயம் பலருக்கும் கிங் காங் பத்திரிகை வைத்திருந்தாலும் திரைத்துறையிலிருந்து பெரிதாக யாரும் வரவில்லை.

சென்னையை சேர்ந்த சங்கர் மகாலிங்கம் சினிமாவில் அறிமுகமான பிறகு கிங் காங் என்று மாறினார். உயரம் குறைவாக இருந்த அவர் அந்த குறைவான உயரத்தை வைத்தே சினிமாவில் படிப்படியாக வளர்ந்தார். தனக்கு வந்த காமெடியை சரியாக பயன்படுத்திய கிங் காங் ரஜினி உள்ளிட்டோரின் படங்களில் நடித்திருக்கிறார். முக்கியமாக அதிசய பிறவி படத்தில் அவர் ஆடும் பிரேக் டான்ஸ் இன்றுவரை பலரால் ரசிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

வடிவேலுவுடனும்: 90களில் சரசரவென்று வளர்ந்த கிங் காங் வடிவேலுவுடனும் பல படங்களில் நடித்திருக்கிறார். மேலும் தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என வேற்று மொழிகளிலும் கலக்கியிருக்கிறார். அவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களில் கீர்த்தனா என்ற மகளும் ஒருவர். அவர் நவீன் என்பவரை காதலித்து தனது தந்தை மற்றும் வீட்டில் திருமணத்துக்கு சம்மதமும் வாங்கிவிட்டார்.

Actor King Kong Feeling for Actors who didn t come to her Daughter s wedding
Photo Credit:

பலருக்கும் பத்திரிகை: மகளின் காதலுக்கு பச்சை கொடி காண்பித்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்த கிங் காங் திரையுலக நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் என பலருக்கும் பத்திரிகை வைத்தார். கோலிவுட் ஸ்டார்கள் மட்டுமின்றி கன்னட திரையுலகை சேர்ந்த சிவராஜ்குமாரையும் நேரில் சந்தித்து பத்திரிகை வைத்தது குறிப்பிடத்தக்கது. அவர் பத்திரிகை வைத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எல்லாம் ட்ரெண்டாகின.

ஜோராக நடந்த திருமணம்: திட்டமிட்டிருந்தபடி நேற்று முன்தினம் கீர்த்தனாவுக்கும், நவீனுக்கும் பெசன்ட் நகர் முருகன் கோயிலில் வைத்து திருமணம் நடந்து முடிந்தது. அதில் கிங் காங் குடும்பத்தினர், நண்பர்கள், திரைத்துறையிலிருந்து சிலர் கலந்துகொண்டார்கள். திருமணத்துக்கு பிறகு சென்னையில் இருக்கும் தனியார் ஹோட்டல் ஒன்றில் ரிசப்ஷனையும் நடத்தி அசத்தினார் கிங் காங்.

முதலமைச்சர் வருகை: அந்த ரிசப்ஷனுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வந்திருந்தார். மேலும் திருமாவளவன், ஜெயக்குமார் உள்ளிட்டோரும் கலந்துகொண்டார்கள். கிங் காங்கை தனது இடுப்பில் ஜெயக்குமார் தூக்கி வைத்த வீடியோ எல்லாம் பலத்த வரவேற்பை பெற்றது. இது ஒருபக்கம் இருக்க திரைத்துறையில் கிங் காங் பத்திரிகை வைத்தவர்களில் பாதி பேர்கூட திருமணத்துக்கும், ரிசப்ஷனுக்கும் வரவில்லை. அது நடிகர்கள் மீது பெரிய விமர்சனத்தை உண்டு செய்திருக்கிறது.

கிங் காங் பேட்டி: இந்நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு கிங் காங் அளித்த பேட்டியில், "சினிமாவில் 35 ஆண்டுகளாக பணியாற்றிவருகிறேன். அதனால்தான் எனக்கு தெரிந்த அனைத்து பெரிய நடிகர்களுக்கும் மகளின் திருமணத்துக்கு நேரில் பத்திரிகை வைத்தேன். ஆனால் அவர்கள் யாருமே வரவில்லை. அப்படி அவர்கள் வராதது எனக்கு கஷ்டமாக இருந்தது" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X