எனக்கும் மனைவிக்கும் அதுதான் பிளான்.. மகன் பிறந்ததே விபத்துதான்.. கிங் காங் கலகல
சென்னை: கிங் காங்கின் மகளுக்கு சில மாதங்களுக்கு முன்புதான் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. அதில் திரைத்துறை பிரபலங்கள் மட்டுமின்றி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். அந்த சமயத்தில் அவரது மகள் திருமணம் மீடியாவில் பரபரத்தது நினைவுகூரத்தக்கது. இந்நிலையில் தனியார் சேனல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் கலகலப்பான விஷயத்தை பகிர்ந்திருக்கிறார்.
கோலிவுட்டில் டாப் காமெடி நடிகர்களுடன் நடித்தவர் கிங் காங். வடிவேலு, விவேக் என பலருடன் காம்பினேஷன் போட்டிருக்கும் அவர் சோலோவாகவும் நன்றாகவே காமெடி செய்யகூடியவர். அவருக்கு இருக்கும் சில உடல்நல பிரச்னைகளை வைத்து; அவரெல்லாம் சினிமாவில் நீடிக்கவே முடியாது என்று பலரும் கூறினார்கள். ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தனது திறமையை நம்பி வளர்ந்திருப்பவர் அவர்.
மற்ற மொழிகளிலும்: தமிழ் மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் நடித்தவர் கிங் காங். தெலுங்கு, ஹிந்தி என கலக்கிய அவர்; இப்போது படங்களில் அதிகம் நடிப்பதில்லை. அவர் பிற மொழிகளிலும் நடித்ததான் காரணமாக அந்தத் திரைத்துறையிலும் பழக்கம் அதிகம் இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில்தான் தனது மகள் காதலித்தவரையே அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தார் கிங் காங்.

திருமண ஏற்பாடுகள் தடல் புடல்: மகளின் திருமணத்தை சிம்ப்பிளாக நடத்தலாம் என்று அவர் முடிவு செய்திருந்தாலும்; சில சூழ்நிலைகள் அவர் பலருக்கும் பத்திரிகை வைக்கும் நிலைமையை உண்டு செய்தது. அதன்படி தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி நடிகர்கள், இயக்குநர்கள் என பலருக்கும் மகளின் திருமண பத்திரிகை வைத்தார். இங்கு மட்டுமின்றி கன்னட திரையுலகத்தை சேர்ந்த சிவராஜ்குமாருக்கும் பத்திரிகை சென்றது குறிப்பிடத்தக்கது.
முதலமைச்சரின் வருகை: சில மாதங்களுக்கு முன்பு கோயிலில் வைத்து சிம்ப்பிளாக திருமணத்தை முடித்துவிட்டு ரிசப்ஷனை தனியார் மண்டபத்தில் வைத்தார். யாரும் எதிர்பார்க்காத வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே நேரடியாக வந்திருந்தார். அவர் மட்டுமின்றி இன்னும் சில அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் என அத்தனை பேரும் படையெடுத்தார்கள். அந்த சமயத்தில் கிங் காங் மகள் திருமணம் பற்றிய பேச்சாகத்தான் சோசியல் மீடியாக்களில் இருந்தன.
கிங் காங் பகிர்ந்த தகவல்: இந்நிலையில் தனியார் சேனல் ஒன்று நடத்திய விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் கிங் காங். அப்போது பேசிய அவர், "முதலில் எனக்கு ஒரு பெண் பிறந்தாள். இரண்டாவது ஒரு பெண் பிறந்தாள். இரண்டு குழந்தைகளோடு போதும் குடும்ப கட்டுப்பாடு செய்துவிடலாம் என்று முடிவெடுத்தோம். ஆனால் அந்த சமயத்தில் குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்ய முடியாது. மனைவியின் உடல்நிலை வீக்காக இருக்கிறது. எனவே ஆறு மாதங்கள் கழித்து செய்துகொள்ளலாம் என்று சொல்லிவிட்டார்கள். ஆனால் அந்த ஆறு மாதங்களுக்குள் மனைவி கர்ப்பமாகிவிட்டார். அது விபத்தாகத்தான் நடந்தது. அந்த பிரசவத்தில் மகன் பிறந்துவிட்டான்" என்றார். இதனை கேட்டு அரங்கில் அத்தனை பேரும் சிரித்துவிட்டார்கள். இந்த வீடியோவும் அதிகம் பகிரப்பட்டுவருகிறது.


Click it and Unblock the Notifications











