மகளின் திருமணம்.. நெகிழ்ந்துபோன நடிகர் கிங் காங்.. என்ன சொல்லிருக்காரு பாருங்க?

சென்னை: கிங் காங் மகள் கீர்த்தனாவின் திருமணம் சமீபத்தில்தான் சென்னையில் நடந்து முடிந்தது. திருமண ரிசப்ஷனுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் வந்திருந்தார்கள். தேடி தேடி சென்று திரைத்துறையினருக்கு பத்திரிகை வைத்தார் கிங் காங். ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் கிங் காங் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

மாற்று திறனாளியான கிங் காங்கிற்கு சிறு வயதிலிருந்தே நடிப்பதற்கு ஆர்வம் வந்தது. இதன் காரணமாக திரைத்துறையில் முயற்சித்து நடிகராக மாறிவிட்டார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்த கிங் காங்கிற்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அவரது குறைவான உயரமே அவருக்கு ப்ளஸ்ஸாக அமைந்துவிட்டது. மேலும் அவரது நடிப்பும் ரசிக்கும்படிதான் இருக்கும்.

மகளுக்கு திருமணம்: கிங் காங்கிற்கு கீர்த்தனா என்ற மகள் இருக்கிறார். அவரும் நவீன் என்பவரும் காதலித்தார்கள். இந்தக் காதலுகு தந்தை தரப்பிலிருந்து சம்மதமும் வாங்கினார் கீர்த்தனா. கிங் காங்கும் சந்தோஷத்தோடு திருமணத்துக்கு க்ரீன் சிக்னல் காண்பிட்து; மகளின் திருமணத்தை பிரமாண்டமாக நடத்திடுவதற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கினார். இதனால் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட அனைத்து நடிகர்களுக்குமே திருமண அழைப்பிதழை கொடுத்தார்.

Actor King Kong thanks everyone for coming to his daughter s wedding
Photo Credit:

சூப்பர் திருமணம்: கோலிவுட் மட்டுமின்றி கன்னடத்திலும் சிவராஜ்குமாருடன் கிங் காங் நடித்திருக்கிறார். எனவே சிவராஜ்குமாருக்கும் நேரில் சென்று பத்திரிகை வைத்தார். சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இருக்கும் பெசன்ட் நகர் முருகன் கோயிலில் கீர்த்தனா - நவீன் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்ததும் தனியார் ஹோட்டலில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

வராத நடிகர்கள்; வந்த முதலமைச்சர்: திருமணத்துக்கு வராத திரையுலக நட்சத்திரங்களில் பெரும்பாலானோர் வரவேற்புக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வரவில்லை. அதேசமயம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் வந்தனர். கிங் காங் மகள் திருமணத்துக்கு வராத நடிகர்களுக்கு பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்துவருகின்றனர். மேலும், 'நான் பத்திரிகை வைத்தது எதையும் எதிர்பார்த்து இல்லை. பல வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன்; அனைவரையும் தெரியும் என்பதால்தான் வைத்தேன். நான் பத்திரிகை வைத்தவர்கள் திருமணத்துக்கு வராதது கஷ்டமாக இருக்கிறது' என்று கிங் காங் கூறியதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது.

நன்றி தெரிவித்த கிங் காங்: இந்நிலையில் கிங் காங் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் அவர், "அனைவருக்கும் வணக்கம். எனது மகள் திருமணத்தை முன்னிட்டு வாழ்த்த வந்த அரசியல் பிரமுகர்கள், சினிமா சான்றோர்கள், சொந்த பந்தங்கள், ரத்த உறவுகள், நண்பர்கள், என் உயிரினும் மேலான ரசிகர்களுக்கும் கோடான கோடி நன்றி" என்று தெரிவித்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X