தாத்தாவானார் கிங்காங்.. மகளுக்கு பிறந்த மகாலட்சுமி.. மனுஷன் செம சந்தோஷத்துல இருக்காரு!

சென்னை: நடிகர் கிங்காங் தனது மகள் கீர்த்தனாவுக்கு கடந்த ஆண்டு வெகு விமர்சையாக, தமிழக மக்கள் அனைவரும் கவனிக்கும் விதமாக, அரசியல் பிரபலங்கள், முன்னணி நடிகர்கள், நடிகைகள் கலந்துகொள்ள, மகள் திருமணத்தை நடத்தினார்.

15.06.2026 இன்று அதிகாலை சென்னை கே.கே.நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், நடிகர் கிங்காங் மகள் கீர்த்தனா, நவீன் தம்பதியினருக்கு, அழகான, ஆரோக்கியமான பெண் குழந்தை சுகப்பிரசவத்தில் பிறந்துள்ளது.

Actor King Kong turns Grandpa his daughter gives birth to female child

தனது வீட்டிற்கு மகாலக்ஷ்மி வந்துள்ளார் என்று, அனைவரிடமும் மிக மகிழ்ச்சியாக இனிப்பு வழங்கி, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார் கிங்காங். சமீபத்தில் தனது மகள் கீர்த்தனாவின் வளைகாப்பு நிகழ்ச்சியையும் விமர்சையாக நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் முதல் இந்தி வரை: ரஜினிகாந்தின் அதிசய பிறவி முதல் விஜய்யின் போக்கிரி என ஏகப்பட்ட படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து அசத்தியவர் தான் நடிகர் கிங்காங். நாம எவ்வளவு உயரம் என்பதை நாம எவ்வளவு உயருகிறோம் என்பதே முக்கியம் என்பதை சாதித்துக் காட்டியவர் தான் நடிகர் கிங்காங். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் இவர் நடித்து மாஸ் காட்டியுள்ளார்.

மகளுக்கு சிறப்பாக திருமணம்: ஆரம்பத்தில் எளிமையாகவே தனது மகள் கீர்த்தனாவின் திருமணத்தை நடத்தலாம் என கிங்காங் நினைத்தார். ஆனால், திடீரென அவரது மகள் திருமணம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்றது. அப்போது முதலமைச்சராக இருந்த மு.க. ஸ்டாலின் நேரில் வந்து மணமக்களான நவீன் - கீர்த்தனாவை வாழ்த்தியது கிங்காங்கை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது. மேலும், பல முன்னணி நடிகர்களும் வந்து மணமக்களை வாழ்த்தினர். சிவகார்த்திகேயனின் தீவிர ரசிகை தனது மகள் என்றும் கிங்காங் பேட்டி ஒன்றில் தெரிவித்தார். திருமணத்துக்கு செல்ல முடியவில்லை என்றாலும், தனியாக வீட்டுக்குச் சென்று சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்தார்.

மகளுக்கு மகாலட்சுமி: ஜூன் 15ம் தேதி இன்று காலை நடிகர் கிங்காங் தாத்தாவாக மாறியுள்ளார். அவரது மகள் கீர்த்தனாவுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்த நிலையில், சமீபத்தில் வளைகாப்பு நிகழ்ச்சியை கோலாகலமாக நடத்தினார். இந்நிலையில், இன்று அதிகாலை கீர்த்தனாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X