நடிகர் கிங் காங் மகள் திருமணம் முடிந்தது.. யார் யார் வந்தாங்க தெரியுமா?.. குவியும் வாழ்த்து

சென்னை: தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் கிங் காங். ஏராளமான படங்களில் நடித்திருக்கும் அவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்திருக்கிறார். இப்போது திரைத்துறையில் வாய்ப்புகள் குறைந்திருக்கும் சூழலில் தனது மகளுக்கு திருமணம் நடத்த முடிவு செய்து; பலருக்கும் பத்திரிகை வைத்தார். இந்நிலையில் இன்று அவரது மகளது திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்தது.

ரஜினிகாந்த் நடித்த அதிசய பிறவி திரைப்படம் அப்போதே ஃபேண்டஸி ஜானரில் உருவானது. அதில் ஒரு காட்சியில் கிங் காங் ஒரு இசைக்கு பிரேக் டான்ஸ் ஆடுவது போன்ற காட்சி இருக்கும். அப்படி நடனமாடி பிரபலமானவர் கிங் காங். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதற்கேற்ப மாற்றுத்திறனாளியான கிங் காங் தனது உயரம் குறைவாக இருந்தாலும் அதனையும் தனது திறமையையும் வைத்து திரைத்துறையில் வளர்ந்தார்.

கிங் காங் யார்?: இப்போது கிங் காங் என்று அழைக்கப்படும் அவரது உண்மையான பெயர் சங்கர் மகாலிங்கம் ஆகும். சென்னை வரதராஜபுரத்தை பூர்வீகமாகக் கொண்ட அவர் பிறக்கும்போதே மாற்றுத்திறனாளியாக பிறந்தார். ஆனாலும் அவருக்குள் நடிப்பு தாகம் ஊற்றெடுக்க நடிகராக வேண்டும் என்று முடிவெடுத்து முயற்சி செய்தார். அந்த முயற்சியின் பலனாக ஊரை தெரிஞ்சிக்குட்டேன் படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து அதிசய பிறவி படத்தில் அவருக்கு வெளிச்சம் கிடைத்தது.

வரிசையாக படங்கள்: அதிசய பிறவி படத்துக்கு பிறகு கிழக்கு கரை, சின்ன பசங்க நாங்க, சாமுண்டி, மின்மினி பூச்சிகள், ஜமீன் கோட்டை, பாஞ்சாலங்குறிச்சி, நாம் இருவர் நமக்கு இருவர், சக்தி, தினந்தோறும் என வரிசையாக் நடிக்க ஆரம்பித்தார். தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய நடிப்பில் ஏதேனும் ஒரு வித்தியாசத்தை காண்பித்துவிடுவார் அவர். ஒருகட்டத்தில் வடிவேலுடனும் தொடர்ந்து காமெடி காட்சிகளில் நடிக்க ஆரம்பித்து பிஸியான நடிகராக வலம் வர ஆரம்பித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்திருக்கிறார். அந்த மொழிகளிலும் தனது திறமையை நிரூபித்து காட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கொரோனா நேரத்தில் ரஜினிகாந்த் கிங் காங்கை தொடர்புகொண்டு ஏதேனும் உதவி வேண்டுமானால் கேட்குமாறு கூறியதும் நினைவுகூரத்தக்கது.

Actor King Kong s daughter Keerthana got married today at Chennai
Photo Credit:

மகளுக்கு திருமணம்: அவருக்கு மொத்தம் மூன்று குழந்தைகள். அவர்களில் ஒரு மகளான கீர்த்தனாவுக்கு திருமணம் நடத்தி வைக்க ஏற்பாடு செய்தார். அதனையடுத்து தமிழ்நாட்டு திரை பிரபலங்கள் பெரும்பாலானோருக்கு மகளின் திருமண அழைப்பிதழை வைத்தார். ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர் என அந்த லீஸ்ட் நீண்டது. மேலும் கன்னட நடிகரான சிவராஜ்குமாரையும் நேரில் சந்தித்து பத்திரிகை கொடுத்தார். டி. ராஜேந்தரை சந்தித்து அவர் திருமண பத்திரிகை வைத்தபோது, உங்களுக்கு என்னுடைய அடுத்த படத்தில் வாய்ப்பு தருவேன் என்று டி.ஆர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நடந்து முடிந்த திருமணம்: சூழல் இப்படி இருக்க திட்டமிட்டபடி இன்று கிங் காங் மகளான கீர்த்தனா; நவீன் என்பவரை பெசன்ட் நகரில் இருக்கும் முருகன் கோயிலில் கரம் பிடித்தார். குடும்பத்தினர், உறவினர்கள், முத்துக்காளை உள்ளிட்ட நடிகர்கள் அந்தத் திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். மேலும் சென்னையில் வரவேற்பு நடக்கவிருப்பதாகவும்; அந்த வரவேற்புக்கு முக்கியமான நடிகர்கள் வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. திருமணமான கீர்த்தனாவுக்கும் நவீனுக்கும் ரசிகர்கள் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X