கிங்காங் மகள் திருமணம் எப்போது தெரியுமா?.. ஜெயிலர் 2 நடிகரை குடும்பத்தோடு சென்று அழைத்திருக்கிறாரே!

பெங்களூர்: நகைச்சுவை நடிகர் கிங்காங் மகள் திருமணம் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், சினிமா பிரபலங்களை நேரில் சந்தித்து தனது மகள் திருமணத்தில் கலந்துக் கொண்டு வாழ்த்த வேண்டும் என அழைத்து வருகிறார். பெங்களூருக்குச் சென்று நடிகர் சிவராஜ்குமாருக்கு திருமண அழைப்பிதழ் வைத்துள்ள புகைப்படம் தற்போது வெளியாகி இருக்கிறது.

1971ம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி பிறந்த சங்கர் ஏழுமலை தான் சினிமாவில் கிங்காங் எனும் புனை பெயருடன் பல படங்களில் நடித்துள்ளார். 1988ல் பாண்டியராஜன், பல்லவி நடிப்பில் வெளியான "ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகர் கிங்காங்.

Actor Kingkong invites Kannada Actor Shiva Rajkumar for his daughter wedding

அன்புக்கட்டளை, நெத்தியடி படங்களை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து அதிசய பிறவி படத்தில் நடித்து பிரபலமானார்.

நடிகர் கிங்காங்: சாமுண்டி, மின்மினி பூச்சிகள், சின்ன ஜமீன், சின்ன புள்ள, ஜமீன் கோட்டை, கட்ட பஞ்சாயத்து, பாஞ்சாலங்குறிச்சி என தமிழ் சினிமாவில் பல படங்களில் காமெடி நடிகராக நடித்து பிரபலமானவர் தான் நடிகர் கிங்காங். கலா என்பவரை திருமணம் செய்துக் கொண்ட கிங்காங்கிற்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அவரது மகளின் திருமணத்தை விரைவில் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், சினிமா பிரபலங்களை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கி வருகிறார்.

போக்கிரி தண்ணீர் லாரி காமெடியை மறக்க முடியுமா?: அந்த தண்ணி என் தண்ணி இல்லை என வடிவேலு தளபதி விஜய்யின் போக்கிரி படத்தில் ரகளை செய்யும் காமெடி காட்சியை ரசிகர்களால் எப்போதுமே மறக்க முடியாது. அந்த காட்சியில், என்ன வண்டி மட்டும் தான் வருது, ஆளக் காணோம் என பார்க்கும் வடிவேலு, நீயாடா இந்த லாரிக்கு டிரைவர் என கேட்கும் இடத்தில் இருந்தே காமெடி ரகளை ரசிகர்களை சிரிக்க வைத்துவிடும். அதே போல கருப்பசாமி குத்தகைக்காரர், சுறா, கந்தசாமி என பல படங்களில் வடிவேலுவுடன் இணைந்து காமெடியில் கலக்கியிருப்பார்.

மகளின் திருமணம் எப்போது?: வரும் ஜூலை 10ம் தேதி சென்னையில் கோலாகலமாக தனது மகள் திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளார் கிங்காங். இவரது முதல் மகள் கல்லூரி படிப்பை முடித்துள்ளார். அவருக்குத்தான் தற்போது திருமணம் செய்யவுள்ளார். 2வது மகள் கடந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது. கிங்காங்கிற்கு ஒரு மகனும் உள்ளார்.

சிவராஜ்குமாருக்கு நேரில் அழைப்பு: கன்னட திரையுலகின் முன்னணி நடிகரும் ஜெயிலர் 2 படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நடித்து வரும் நடிகர் சிவராஜ்குமாரை பெங்களூரில் உள்ள அவரது இல்லத்துக்கு மனைவி மற்றும் மகளுடன் சென்ற கிங்காங் மகளின் திருமணத்தில் கட்டாயம் கலந்துக் கொண்டு ஆசிர்வாதம் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். சிவராஜ்குமாரும் கிங்காங்கின் அழைப்பை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டு முதல் ஆளாக வந்து விடுகிறேன் என்று கூறியுள்ளாராம். தமிழில் ஜெயிலர், கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள சிவராஜ்குமார் சமீபத்தில், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X