ரஜினியுடன் அதிகமான படங்களில் நடித்த காஜா ஷெரீப்.. கிங்காங் சொன்னது என்னன்னு பாருங்க!

சென்னை: 80களில் மிகவும் பிரபலமான நடிகராக இருந்தவர் காஜா ஷெரீப். ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் அதிகமான படங்களில் நடித்தவர். விசு உள்ளிட்ட இயக்குநர்களின் படங்களிலும் இவரை அதிகமாக பார்க்க முடிந்தது. சம்சாரம் அது மின்சாரம் படத்தில் தன்னுடைய காதலுக்காக இவர் பரிதவித்தது ரசிகர்களை அதிகமாக உணர்ச்சிவசப்பட செய்தது.

இதேபோல பாக்யராஜுடன் அந்த ஏழு நாட்கள் படத்திலும் லீட் கேரக்டரில் நடித்திருந்தார் காஜா ஷெரீப். பாலக்காட்டு மாதவன் கேரக்டரில் பாக்யராஜ் கலக்கலான நடிப்பை வெளிப்படுத்திய நிலையில், அவருக்க உதவியாளராக காஜா ஷெரீப் நடித்திருந்தார். இந்தக் கேரக்டரும் எவர்கிரீன் ரகம்தான்.

Kingkong Kaja sheriff tamil cinema

நடிகர் காஜா ஷெரீப்: 80களில் மிகவும் பிரபலமான நடிகராக கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் அதிகமான படங்களில் நடித்தவா காஜா ஷெரீப். விசு இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான சம்சாரம் அது மின்சாரம் படம் காஜா ஷெரீப்பிற்கு மிகச்சிறப்பான கேரக்டரை கொடுத்தது. இந்தப் படத்தில் விடலை பருவத்து காதலை மிகச்சிறப்பாக ரசிகர்களிடையே கடத்தியிருப்பார் காஜா ஷெரீப். இவர் கமல்ஹாசனை போல மிகச்சிறப்பான நடிகராக வருவார் என்று இயக்குநர் சிகரம் கே பாலசந்தர் கூறியதாக கூறப்படுவதுண்டு. ஒரு கட்டத்தில் இவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் குறைந்த நிலையில் தற்போது வெளிநாட்டில் வசித்து வருகிறாராம்.

கிங்காங் -காஜா ஷெரீப் சந்திப்பு: வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகளை காஜா ஷெரீப் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. குழந்தை நட்சத்திரமாகவே சினிமாவில் என்ட்ரி கொடுத்த இவர், தொடர்ந்து பல நடிகர்களுடன் காமெடி கலாட்டா செய்தவர். இந்நிலையில் தற்போது நடிகர் கிங்காங்கை காஜா ஷெரீப் சந்தித்து பேசி மகிழ்ந்துள்ளார். இதன் வீடியோவை தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் நடிகர் கிங்காங் வெளியிட்டுள்ளார். தன்னுடைய இனிய நண்பர் என கிங்காங் காஜா ஷெரீப்பை கட்டித்தழுவிக் கொள்ள அவரை அப்படியே காஜா ஷெரீப் தூக்குவதாக இந்த வீடியோவில் காணப்படுகிறது.

சூப்பர்ஸ்டாருடன் அதிக படங்கள்: இதையடுத்து தொடர்ந்து பேசிய கிங்காங், ஒரு காலகட்டத்தில் சினிமாவில் காஜா ஷெரீப் கலக்கியதாகவும், அந்த ஏழு நாட்கள், சம்சாரம் அது மின்சாரம், சூப்பர்ஸ்டாருடன் படங்களில் நடித்தவர் என்று கிங்காங் கூற, தொடர்ந்து பேசிய காஜா ஷெரீப், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் ஆறிலிருந்து அறுபது வரை, அன்புக்கு நான் அடிமை, ரங்கா, துடிக்கும் கரங்கள், தர்மத்தின் தலைவன், தனிக்காட்டு ராஜா, நான் சிகப்பு மனிதன்,மூன்று முடிச்சு போன்ற படங்களில் நடித்துள்ளதாக பட்டியலிட்டுள்ளார்.

காஜா ஷெரீப்பின் தீவிர ரசிகர்: தொடர்ந்து பேசிய கிங்காங், தான் காஜா ஷெரீப்பின் தீவிர ரசிகர்கள் என்று கூற, தானும் கிங்காங்கின் தீவிர ரசிகர் என்று ஒருவருக்கொருவர் கட்டியணைத்தபடி பேசுகின்றனர். தொடர்ந்து காஜா ஷெரீப்பின் அதிகமான ஸ்டார் நைட் நிகழ்ச்சிகளில் தான் அதிகமாக பங்கேற்றுள்ளதாகவும் அந்த காலத்திலேயே தன்னுடைய சம்பளத்தை உயர்த்திக் கொடுத்தவர் அவர்தான் எனவும் கிங்காங் தன்னுடைய உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளார். தன்னுடைய இனிய நண்பரான காஜா ஷெரீப்பை சந்தித்தது குறித்தும் கிங்காங் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X