'கட்டத்துரைக்கு கட்டம் சரியில்ல..' பிரபல நடிகையின் வேற லெவல் போட்டோ.. ஹேட்டர்ஸ் ஒதுங்கணுமாம்!
சென்னை: பிரபல நடிகை வெளியிட்டுள்ள வேற லெவல் போட்டோ வைரலாகி வருகிறது.
Recommended Video
இன்ஸ்டாகிராமில் தங்கள் நேரத்தை செலவிடும் நடிகைகள், அதை புகைப்படங்களால் நிரப்பி வருகின்றனர்.
தங்கள், முன்னால், இந்நாள் போட்டோக்களை பதிவு செய்து அதற்கு அட்டகாசமான கேப்ஷன்களை பதிவிட்டு வருகின்றனர்.

முன்னாள் ஹீரோயின்ஸ்
இதற்கு ஏராளமான ரசிகர்கள் லைக்ஸ்களையும் கமென்ட்களையும் அள்ளிக் குவிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இப்போதைய இளம் ஹீரோயின்களுக்கு இணையாக முன்னாள் ஹீரோயின்களும் ஹாட் போட்டோ வெளியிட ஆர்வம் காட்டி வருகின்றனர். முன்னாள்
ஹீரோயின் மினிஷா லம்பா உட்பட பல நடிகைகள் இந்த லிஸ்டில் இருக்கிறார்கள். அதில் ஒருவர் நம்ம கிரண்!

கமலின் அன்பே சிவம்
'வின்னர்' கிரணை அதற்குள் எப்படி மறந்திருக்க முடியும்? விக்ரமின் 'ஜெமினி'யில் அறிமுகமாகி, அஜித்தின் வில்லன், கமலின் அன்பே சிவம், சரத்குமாரின் திவான், அரசு உட்பட பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர் கிரண். இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளிலும் நடித்து வந்த இவர், இப்போது கேரக்டர் ரோலில் நடித்து வருகிறார்.

கிளாமர் ஸ்டில்ஸ்
இப்போது சந்தானத்தின் சர்வர் சுந்தரம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. டிக்டாக்கில் தமிழ்ப் பாடல்களுக்கு ஆடி, பாடி தமிழ்ப் பாசம் காட்டிய கிரண், இந்த லாக்டவுனில் தனது கிளாமர் ஸ்டில்களை பதிவேற்றுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன், அவர் பதிவிட்டிருந்த போட்டோக்கள் வைரலாயின.

மீண்டும் மிரட்டுவோம்
இப்போது, வேற லெவல் பிகினி ஸ்டில் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தப் போட்டோவுக்கு கேப்ஷனாக, 'வெறுப்பவர்கள் ஒதுங்கிக்கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார். இதற்கு நடிகை மேக்னா ராஜ், அருமை. வெறுப்பவர்கள் வெறுத்துக்கொண்டுதான் இருப்பார்கள். நீங்கள் கலக்குங்கள் என்று கூறியுள்ளார். அதற்கு நன்றி தெரிவித்துள்ள கிரண், நாம் மீண்டும் மிரட்டுவோம் என்று கூறியிருக்கிறார்.

கட்டம் சரியில்லை
ஒரு வெறித்தன ரசிகர் ஒருவர், 'வெறுக்கிறவங்களா? கட்டத்துரைக்கு கட்டம் சரியில்லை, கைப்புள்ள பேசறேன், சொல்லுங்க யார் அந்த ஹேட்டர்ஸ்? என்று மிரட்டலாக கேட்டிருக்கிறார் கிரணிடம். இன்னொருவர் உங்களுக்கு 40 வயசு இருக்காது? என்று கேட்டுள்ளார். யாரையும் கண்டுக்காதீங்க. வெறுக்கிறவங்க வெறுக்கட்டும், அதை தாண்டி போயிட்டே இருங்க? என்று அட்வைஸ் செய்துள்ளார் இன்னொருவர்.

எப்படி வெறுக்க முடியும்?
பல நெட்டிசன்கள், ஹேட்டர்ஸா? எப்படி ஒருத்தர் உங்களை வெறுக்க முடியும்? வாய்ப்பே இல்லை என்று தெரிவித்துள்ளனர். போட்டோ கிளாரிட்டி ரொம்ப சுமார்தான். ஆனாலும் இந்த போட்டோவுல அசத்தலா இருக்கீங்க என்று கூறியுள்ளார் ஒருவர். இதோட ஒரிஜினல் போட்டோ தேவை என்றும் இதே போன்ற போட்டோவை எதிர்பார்க்கிறோம் என்றும் பலர் தெரிவித்துள்ளனர்.

இன்ஸ்டா பத்திக்கும்
'போட்டோ குவாலிட்டியா மட்டும் இருந்ததுன்னா இன்ஸ்டா பத்திக்கும்' என்று ஒருவர் கூறியுள்ளார். சிலர் உங்களுக்கு யார் ஹேட்டர்ஸ், நாங்க கிரண் ஆர்மி இருக்கோம் என்று தெரிவித்துள்ளார். பலர், போட்டோ பாத்ததும் பேச்சுமூச்சே வரலை, கிளியரான போட்டோவா போட்டா என்ன? என்று ஏக்கமாக கேட்டுள்ளனர். இந்த போட்டோ வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











