பிரபல தயாரிப்பாளர் கொரோனாவுக்கு பலி.. நண்பரை இழந்துவிட்டேன்.. நடிகர் கிருஷ்ணா உருக்கம்!
சென்னை: யாக்கை பட தயாரிப்பாளர் முத்துக்குமரன் மறைவுக்கு பிரபல நடிகராக கிருஷ்ணா உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.
கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான படம் யாக்கை. இந்தப் படத்தில் நடிகர் கிருஷ்ணா, ஸ்வாதி ரெட்டி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இப்படத்தை குழந்தை வேலப்பன் இயக்கியிருந்தார். பிரைம் பிக்சர்ஸ் சார்பில் முத்துக்குமரன் தயாரித்திருந்தார். சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட முத்துக்குமரன் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

முத்துக்குமரன் மரணம்
அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முத்துக்குமரன் மரணமடைந்தார்.

மனைவி 2 மகள்கள்
மறைந்த தயாரிப்பாளர் முத்துக்குமரனுக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். அவரது மறைவுக்கு தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் கிருஷ்ணா இரங்கல்
அந்த வகையில் அவர் தயாரித்த யாக்கை படத்தின் ஹீரோவான நடிகர் கிருஷ்ணா தனது சமூக வலைதள பக்கத்தில் முத்துக்குமரனின் மறைவுக்கு உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.

நண்பரை இழந்துவிட்டேன்
இதுதொடர்பாக அவர் பதிவிட்டிருப்பதாவது, இன்று எனது நெருங்கிய நண்பரையும் எனது படத்தின் தயாரிப்பாளரையும் இழந்துள்ளேன். அவர் எனக்கு குடும்பம். நான் இதுவரை சந்தித்த மிக நல்ல மனிதர் எதையும் அல்லது யாரிடமும் "இல்லை" என்று சொல்லமாட்டார். எப்போதும் மக்களை மகிழ்ச்சியாகப் பார்க்க விரும்பினார். நாங்கள் உங்களை இழப்போம். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். சீக்கிரம் சென்றுவிட்டார் என குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











