தருணம் பட நாயகன் கிஷன் தாஸ் திருமணம்.. நீண்ட நாள் காதலியை கரம்பிடித்த ஹீரோ!
சென்னை: அஜித்தின் நேர் கொண்ட பார்வை படத்தில் கேமியோ கேரக்டரில் நடித்திருந்த கிஷன் தாஸ், முதல் நீ முடிவும் நீ படத்தின்மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தவர். இவரது நடிப்பில் சின்க், சிங்கப்பூர் சலூன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இன்றைய தினம் இவருக்கு மறக்க முடியாத நாளாக அமைந்துள்ளது.
கிஷன் தாஸ் நடிப்பில் இன்றைய தினம் தருணம் படம் ரிலீசாகியுள்ள நிலையில் தன்னுடைய நீண்ட நாள் காதலியான சுசித்ராவை திருமணம் செய்துள்ளார். இவர் பிரபல சின்னத்திரை நடிகை பிருந்தா தாஸின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. கிஷன் தாஸ் திருமணத்தையொட்டி அவருக்கு நேரிலும் சமூக வலைதளங்களிலும் பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

நடிகர் கிஷன் தாஸ்: நடிகர் கிஷன் தாஸ்: சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பிருந்தா தாஸ். ஆனந்தம் சீரியலில் இவரது கேரக்டர் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இவரது மகன் கிஷன் தாஸும் சினிமாவில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். நேற்றைய தினம் கிஷன் தாஸ் ஹீரோவாக நடித்துள்ள தருணம் படம் ரிலீசாகியுள்ளது. இதனிடையே நேற்றைய தினம் கிஷன் தாஸின் திருமணம் அவரது நீண்ட நாள் காதலியான சுசித்ராவுடன் நடந்து முடிந்துள்ளது. ஒரே நாளில் தன்னுடைய வாழ்க்கையின் மறக்க முடியாத இரண்டு தருணங்களை என்ஜாய் செய்து வருகிறார் இந்த தருணம் பட நாயகன்.
முதல் நீ முடிவும் நீ பட ஹீரோ: முன்னதாக அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படம் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்திருந்தார் கிஷன் தாஸ். இந்த படத்தில் இவரது கேரக்டர் சிறியதாக இருந்தாலும் கவனத்தை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து முதல் நீ முடிவும் நீ படம் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார். அடுத்தடுத்து சிங்கப்பூர் சலூன், சின்க் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள கிஷன் தாஸ் ஹீரோவாக நடித்துள்ள தருணம் படம் வெளியாகி சிறப்பான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்தப் படம் கடந்த பொங்கலையொட்டி ரிலீசாகவிருந்த நிலையில் இன்றைய தினம் ரிலீசாகியுள்ளது.
கிஷன் தாஸ் -சுசித்ரா திருமணம்: கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கிஷன் தாஸ் மற்றும் சுசித்ரா இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. இதை சமூக வலைதளங்கள் மூலமாக கிஷன் தாஸ் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தினார். இந்நிலையில் நேற்றைய தினம் இந்த ஜோடியின் திருமணம் நடந்து முடிந்தள்ளது. இதில் திரை துறை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். மேலும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் இவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
திருமண கொண்டாட்டம்: தன்னுடைய திருமண கொண்டாட்டத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடுத்தடுத்த பதிவுகளாக கொடுத்துள்ளார் கிஷன் தாஸ். தன்னுடைய துணையுடன் இணைந்தும் மற்றவர்களுடன் கூட்டணி அமைத்தும் இவர் அடுத்தடுத்த பாடல்களுக்கு ஆடியது அனைவரையும் வெகுவாக கவர்ந்து கைத்தட்டல் போட வைத்தது. அரவிந்த் சீனிவாசன் இயக்கத்தில் வெளியாகியுள்ளது தருணம் படம். படத்தின் ரிலீசையொட்டி பரபரப்பான சேஸிங் சண்டைக்காட்சியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











