நடிகர் கிஷோருக்கு இன்று பிறந்தநாள்.. குவியும் வாழ்த்துக்கள்!
சென்னை : தமிழில் ஆடுகளம், பொல்லாதவன் என ஒரு சில திரைப்படங்களிலேயே சிறந்த நடிகர் என தமிழ் ரசிகர்களிடம் பெயர் வாங்கியவர் நடிகர் கிஷோர்.
Recommended Video
கன்னட திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடிப்பில் மிரட்டி வருகிறார்.
எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் அதில் தன்னை கச்சிதமாக பொறுத்திக் கொண்டு ரசிகர்களை தொடர்ந்து ரசிக்க வைத்த வரும் நடிகர் கிஷோர் ஆகஸ்ட் 14 ஆம் தேதியான இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருவதையொட்டி இவரது ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

முதல் படமே
ஒரு நடிகருக்கு பெருமையே ரசிகர்கள் அவர்களை சிறந்த நடிகர் என கொண்டாடுவது தான், இயல்பிலேயே அதீத நடிப்பாற்றல் கொண்ட நடிகர் கிஷோர் கன்னட திரைப்படங்களில் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் தமிழில் இவர் மிகப் பிரபலமான நடிகராக வலம் வருகிறார். தமிழில் இவர் நடித்த முதல் படமே இவருக்கும் சிறந்த நடிகர் என்ற பெயரை பெற்றுத்தந்தது.

வில்லன் கலந்த ஹீரோயிசம்
வெற்றிமாறன் மற்றும் தனுஷ் கூட்டணியில் முதன்முதலாக உருவான பொல்லாதவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்யப்பட்ட கிஷோர், அதில் வில்லன் கலந்த ஹீரோயிசம் நடிப்பின் மூலம் ரசிகர்களையும் கவர்ந்ததை தொடர்ந்து தற்போது பல்வேறு திரைப்படங்களில் தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

விருதுகள் பாராட்டுகள்
ஹீரோக்களுக்கு இணையாக வில்லன் கதாபாத்திரத்திலும் மிரட்டும் நடிப்பில் கலக்கி வரும் கிஷோர் தமிழில் முன்னணி கதாநாயகர்களாக உள்ள ரஜினி, தனுஷ், அஜித் மற்றும் விஜய்சேதுபதி என பல்வேறு ஹீரோக்களுடன் நடித்து பல்வேறு விருதுகளையும் பாராட்டுகளையும் இன்றுவரை பெற்று வருகிறார்.

நடிக்க தயங்கும் கதைகளை
மிரட்டலான வில்லன் கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வந்த கிஷோர் அதேசமயம் வெண்ணிலா கபடி குழு, ஹரிதாஸ், ஹவுஸ் ஓனர் போன்ற பலரும் நடிக்க தயங்கும் கதைகளையும் தேர்ந்தெடுத்து சவாலான கதாபாத்திரங்களையும் மிக நேர்த்தியாக தனது அசராத நடிப்பின் மூலம் ரசிகர்களை ரசிக்க வைத்து வருகிறார்.

எளிமையான வாழ்க்கை
நடிப்பில் கை தேர்ந்தவராக இருக்கும் கிஷோர், படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் கர்நாடகா மாநிலத்தில் உள்ள தனது சொந்த தோட்டத்தில் விவசாயம் செய்து அசத்தி வருகிறார். இயற்கை முறையில் விவசாயம் செய்து அசத்தி வரும் இவர் ஒருபுறம் நடிப்பு மற்றொருபுறம் விவசாயம் என ஒரு எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து பலருக்கும் முன்னோடியாக விளங்கி வருகிறார்.

பிறந்த நாள்
இவ்வாறு திரைப்படங்களில் வில்லனாகவும் நிஜ வாழ்க்கையில் விவசாயி ஆகவும் இருந்து வரும் நடிகர் கிஷோர் ஆகஸ்ட் 14 ஆம் தேதியான இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருவதையொட்டி இவரது ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











