twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இமயமலை...4 டிகிரி குளிர்... உயரமான மலைப்பாதை... பைக் ஓட்டி சாகசம் செய்த கிஷோர்..!

    'பசுமை வழி சாலை’ படத்துக்காக நடிகர் கிஷோர் த்ரில்லிங் பயணம் மேற்கொண்டார்.

    |

    சென்னை: 'பசுமை வழி சாலை' படத்துக்காக நடிகர் கிஷோர், இமயமலை உச்சியில் 4 டிகிரி குளிரில் த்ரில்லிங் பயணம் மேற்கொண்டார்.

    'பசுமை வழி சாலை' என்கிற பெயர் சமீபகாலமாக மக்கள் மனதில் அழுத்தமாக பதிந்த பெயர். தற்போது அதே பெயரில் தமிழில் ஒரு படம் உருவாகி வருகிறது. சென்னை - சேலம் இடையே புதிதாக அமைய உள்ள பசுமை வழி சாலையை பின்னணியாக கொண்டு இந்தப்படம் உருவாகி வருகிறது.

    இந்தப்படத்தில் கிஷோர், பசுபதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். சத்துவா புரொடக்ஷன்ஸ் சார்பில் நிருபமா இந்தப்படத்தை தயாரிக்கிறார். சந்தோஷ் கோபால் இயக்கும் இந்தப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

     இமயமலையில் படப்பிடிப்பு

    இமயமலையில் படப்பிடிப்பு

    சமீபத்தில் இந்தப்படத்தின் சில முக்கியமான காட்சிகளை ஜம்மு காஷ்மீர், லெஹ், லடாக், திபெத், நேபாளம் மற்றும் பூடான் என பல்வேறு இடங்களில் கிட்டத்தட்ட 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி திரும்பியுள்ளனர்.

    நன்கு ஆராய்ந்து தேர்வு

    நன்கு ஆராய்ந்து தேர்வு

    படத்தின் கதாநாயகர்களில் ஒருவரான கிஷோர் மற்றும் படக்குழுவினர் படப்பிடிப்பிற்கான இடங்களை நன்கு ஆராய்ந்து தேர்வு செய்தனர். அதுமட்டுமல்ல இமயமலை பிரதேசத்தில் மிகவும் தீவிரமான வானிலை நிலவியபோதும் கூட படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.

    4 டிகிரி குளிர்

    4 டிகிரி குளிர்

    படப்பிடிப்பின் போது நடிகர் கிஷோர் நான்கு டிகிரி குளிர் நிலவிய, மிகவும் சிரமமான பகுதிகளில் பைக் ஓட்டிச் சென்றார். கடுங்குளிரிலும் கிஷோர் பைக் ஓட்டிச் சென்றதை பார்த்து படக்குழுவினர் ஆச்சர்யப்பட்டனர்.

    தஷி லுன்போ மடம்

    தஷி லுன்போ மடம்

    மேலும் இந்த படக்குழுவினர் திபெத்தில் உள்ள உலகப்புகழ் பெற்ற தஷி லுன்போ மடத்திலும் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். மேலும் உலகத்திலேயே மிக உயரத்தில் வாகனங்கள் செல்லும் சாலைகளை கொண்ட புகழ்பெற்ற கார்டுங்லா மலைப்பகுதியில் இதுவரை படப்பிடிப்பு நடந்திராத இடங்களில் சில காட்சிகளை படமாக்கியுள்ளனர்.

    ராணுவத்திடம் சிறப்பு அனுமதி

    ராணுவத்திடம் சிறப்பு அனுமதி

    ஜம்மு காஷ்மீரில் உள்ள லெஹ் நகரத்தில் இந்திய ராணுவ தளத்திற்கு மிக அருகில் படப்பிடிப்பு நடத்த சில சிறப்பு அனுமதிகள் பெற்று, பல பகுதிகளில் வான்வழி காட்சிகளை படமாக்கியுள்ளனர்.

    English summary
    In Pasumai vazhi salai movie shoing, one of the lead actors of the film Kishore and the team explored several locations and the team shot under extreme weather conditions near the Himalayan mountain region.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X