எவ்வளவு நாள்தான் இப்படி இருக்கறது? ஓடிடி-க்காக உருவாகும் படத்தில் அடுத்த அவதாரம் எடுக்கும் நடிகர்

By

சென்னை: ஓடிடி-க்காக உருவாகும் படத்துக்காக பிரபல நடிகர் அடுத்த அவதாரம் எடுக்க இருக்கிறார்.

வெற்றிமாறன் இயக்கிய 'பொல்லாதவன்' மூலமாக தமிழில் அறிமுகமானவர் கன்னட நடிகர் கிஷோர்.

இந்தப் படத்தில் சிறந்த வில்லனாகக் கவனிக்கப்பட்ட இவருக்குத் தமிழில் தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்தன.

வெற்றிமாறனின் ஆடுகளம்

வெற்றிமாறனின் ஆடுகளம்

இந்தப் படத்தை அடுத்து ஆர்.கண்ணன் இயக்கத்தில் வினய் நடித்த ஜெயம் கொண்டான், சிம்பு நடித்த சிலம்பாட்டம், சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடிகுழு, முத்திரை உட்பட பல படங்களில் நடித்தார். பின்னர், வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'ஆடுகளம்' மூலம் மீண்டும் கவனிக்கப்பட்ட கிஷோர், தொடர்ந்து அவர் இயக்கும் படங்களில் நடித்து வருகிறார்.

தெலுங்கு, மலையாளம்

தெலுங்கு, மலையாளம்

ஜி.என்.ஆர்.குமரவேல் இயக்கிய ஹரிதாஸ், அஜித்தின் ஆரம்பம் உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ள கிஷோர், தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார். வில்லன், குணசித்திர வேடங்களில் அலட்டாமல் நடித்து வரும் நடிகர் கிஷோர், வெப்சீரிஸிலும் நடித்துள்ளார். இப்போது நடிப்பில் இருந்து அடுத்தக் கட்டத்துக்கு செல்ல இருக்கிறார் அவர். அதாவது டைரக்டர் ஆகிறார்.

கதையில் மாற்றம்

கதையில் மாற்றம்

'பிளாக் அண்ட் ஒயிட்' என்ற படம் மூலம் அவர் இயக்குனராக இருக்கிறார். இந்தப் படத்தை முதலில் வேறு ஒரு இயக்குனர் இயக்குவதாக இருந்தது. சில காரணங்களால் கதையில் மாற்றம் செய்யப்பட்டதையடுத்து நடிகர் கிஷோர் இயக்க இருக்கிறார். தமிழ், கன்னடத்தில் உருவாகும் இந்தப் படத்தில் கிஷோர், ரோஜர் நாராயண், ஸ்ரீகிருஷ்ண தயாள், சுரேகா உட்பட பலர் நடிக்கின்றனர்.

Recommended Video

OTT யால் சினிமா THEATER அழியாது | PRODUCER THANU |பொன்மகள் வந்தாள் MOVIE ISSUE | Oneindia Tamil
தியேட்டர்களில் இல்லை

தியேட்டர்களில் இல்லை

இந்த முழு படமும் ஒரே இடத்தில் படமாக்கப்பட இருக்கிறது. இதை தியேட்டர்களில் இல்லாமல் ஓ.டி.டி-யில் வெளியிட முடிவு செய்துள்ளனர். கணவன் மனைவிக்குள் ஏற்படும் பிரச்னைகள், பிக்பாஸ் நிகழ்ச்சி உள்ளிட்டவற்றை மையமாக வைத்து இதன் கதை உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே சில ஹீரோக்கள், இயக்குனராக மாறியுள்ளனர். அந்த வரிசையில் கிஷோரும் இப்போது இயக்குனராக களம் இறங்குகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X