Kizhen Das:நிச்சயதார்த்தத்தை முடித்த கிஷன் தாஸ்.. நீண்டநாள் தோழியுடன் கைகோர்ப்பு!

சென்னை: முதல் நீ முடிவும் நீ என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் சிறப்பான என்ட்ரியை கொடுத்தவர் கிஷன் தாஸ்.பிரபல டிவி நடிகை பிருந்தா தாஸின் மகன் கிஷன் தாஸ். கடந்த 2016ம் ஆண்டு முதல் ஆங்கராகவும் செயல்பட்டு வருகிறார். தொடர்ந்து ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான முதல் நீ முடிவும் நீ படத்தின் மூலம் இவர் ஏராளமான ரசிகர்களை கட்டிப்போட்டார். முன்னதாக அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்திலும் சிறிய கேரக்டரில் இவர் நடித்து கவனம் ஈர்த்திருந்தார். இந்நிலையில் அடுத்தடுத்து சிங்கப்பூர் சலூன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

இவரது நடிப்பில் அடுத்ததாக தருணம், ஈரப்பதம் காற்று மழை ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. சமூக வலைதளங்களிலும் மிகவும் பிசியாக காணப்படுகிறார் கிஷன் தாஸ். இந்நிலையில் இன்றைய தினம் தன்னுடைய நீண்டநாள் தோழியுடன் தன்னுடைய நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதை அவர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் அவர் வெளியிட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. முதல் நீ முடிவும் நீ படத்தில் கிஷன் தாசுடன் இணைந்து நடித்திருந்த மீதா ரகுநாத்திற்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது கிஷன் தாசும் தன்னுடைய நிச்சயத்தை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Actor Kizhen das announced about his engagement with his best friend

நடிகர் கிஷன் தாஸ்: ஆங்கராக தன்னுடைய பயணத்தை துவங்கியவர் நடிகர் கிஷன் தாஸ். தொடர்ந்து ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான முதல் நீ முடிவும் நீ படத்தின்மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தார். இந்தப் படத்தில் அவருடன் மீதா ரகுநாத் இணைந்து நடித்திருந்தார். இந்த ஜோடி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஏராளமான இளைஞர்களை கவர்ந்து வெற்றிப்படமாகவும் அமைந்தது. முன்னதாக அஜித்துடன் நேர் கொண்ட பார்வை படத்தில் சிறிய கேரக்டரில் நடித்து கோலிவுட்டில் தன்னுடைய என்ட்ரியை பதிவு செய்திருநதார் கிஷன் தாஸ். தொடர்ந்து சிங்கப்பூர் சலூன் உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

Actor Kizhen das announced about his engagement with his best friend

கிஷன் தாஸ் நிச்சயதார்த்தம்: பிரபல சின்னத்திரை நடிகையான பிருந்தா தாசின் மகனான கிஷன் தாஸ், சிங்க் என்ற படத்திலும் நடித்து கவனம் பெற்றார். இந்தப் படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியானது. தொடர்ந்து தற்போது தருணம், ஈரப்பதம் காற்று மழை போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்தப் படங்கள் ரிலீசாகவுள்ளன. அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்துவரும் கிஷன் தாசுக்கு அவரது நீண்ட நாள் காதலியுடன் தற்போது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இதுகுறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிச்சயதார்த்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கிஷன் தாஸ் பகிர்ந்துள்ளார்.

Actor Kizhen das announced about his engagement with his best friend

நிச்சயதார்த்தத்தை அறிவித்த கிஷன் தாஸ்: இந்த வீடியோக்களில் அவரும் அவருடைய காதலியும் அடுத்தடுத்து பாடுவது போலவும் காணப்படுகிறது. தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் போல தானும் தன்னுடைய உயிர்த்தோழியை திருமணம் செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவள் நோ சொல்லவில்லை என்றும் உணர்வுபூர்வமாக குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவையடுத்து கிஷன் தாசிற்கு மஞ்சிமா மோகன், கௌரி கிஷன், ரெஜினா ஆத்மிகா உள்ளிட்ட பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். விரைவில் இவர் தனது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கலாம்.

Actor Kizhen das announced about his engagement with his best friend

அடுத்தடுத்த படங்கள்: முதல் நீ முடிவும் நீ படத்தில் கிஷன் தாசுடன் இணைந்து நடித்திருந்த மீதா ரகுநாத்திற்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்து முடிந்தது. இந்நிலையில் கிஷன் தாஸிற்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு முதல் ஆங்கராக செயல்பட்டுவரும் கிஷன் தாஸ், அடுத்தடுத்த படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்து அடுத்தடுத்த வாய்ப்புகளை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X