twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகர் சங்கத்தின் முன்னாள் துணை தலைவர் நடிகர் காளை மாரடைப்பால் மரணம்

    By Siva
    |

    சென்னை: பழம்பெரும் நடிகர் கே.என். காளை மாரடைப்பால் உயிர் இழந்தார்.

    பழம்பெரும் நடிகர் கே.என். காளை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவராக இருந்தார். சென்னையில் வசித்து வந்த அவர் மாரடைப்பால் உயிர் இழந்தார். அவருக்கு வயது 84.

    Actor KN Kaalai no more

    விஜயகாந்த், ராதாரவி, சரத்குமார் காலத்தில் இணைந்து பணியாற்றிய அவர் கலைமாமணி, மலேசிய நாடகக் காவலர் விருது உள்பட பல விருதுகளை பெற்றவர். நடிகர் சங்க தேர்தலின் போது நடிகர் ராதாரவியுடன் சேர்ந்து தமிழகம் முழுவதும் பயணம் செய்து நாடக நடிகர்களின் ஆதரவை கோரியவர் காளை.

    அவ்வாறு ஆதரவு கோரியபோது சில நடிகர்களை அவதாறாக பேசியதாக ராதாரவி மற்றும் காளை மீது புகார் எழுந்தது. நடிகர்களை அவதூறாக பேசிய காளை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சங்கத்தின் அப்போதைய தலைவர் சரத்குமாரிடம் நடிகர் விஷால் மனு அளித்தார்.

    அவரது புகாரின்பேரில் சரத்குமாரும் அவருக்கு நோட்டீஸ் அனுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. பல படங்களில் நடித்துள்ள அவர் கடைசியாக நடித்த படம் கிடாரி. அதில் அவர் கிடாரியை யாருன்னு நினைச்ச என் சிஷ்யன்டா என்று பேசும் வசனம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.

    English summary
    Popular actor KN Kaalai passed away at the age of 84 on sunday.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X