கோட்டா சீனிவாச ராவுக்கு இன்று பிறந்தநாள்.. இணையத்தில் குவியும் வாழ்த்து!

ஹைதராபாத் : தன்னுடைய மிரட்டும் நடிப்பின் மூலம் பார்க்கும் அனைவரையும் அதிர வைத்து வரும் கோட்டா சீனிவாச ராவ் இன்றும் பல படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.

தமிழில் சாமி, திருப்பாச்சி, ஆல் இன் ஆல் அழகுராஜா போன்ற திரைப்படங்கள் மூலம் மிகவும் பிரபலமான இவர் இன்று தனது பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார்.

ஜூலை 10 ஆம் தேதியான இன்று இவர் தனது 73வது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி திரைப்பிரபலங்கள் பலரும் இவருக்கு வாழ்த்துக்களை சொல்லி மகிழ்வித்து வருகின்றனர்.

வயதான தோற்றத்தில்

வயதான தோற்றத்தில்

திரைப் படங்களில் ஹீரோவுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ அதைவிட இரண்டு மடங்கு முக்கியத்துவம் அந்த படங்களில் நடிக்கும் வில்லன்களுக்கு கொடுக்கப்படுகிறது. பொதுவாக வில்லன் என்றால் இளம் நடிகராகவும் கட்டுடலுடனும் பார்ப்போரை மிரள வைக்கும் பார்வையுடனும் இருக்க வேண்டும் என பலரும் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் அதையெல்லாம் உடைத்து தனது வயதான தோற்றத்தில் பலரையும் மிரட்ட முடியும் என நிரூபித்து காட்டியவர் நடிகர் கோட்டா சீனிவாச ராவ்.

 தமிழ் ரசிகர்கள்

தமிழ் ரசிகர்கள்

தெலுங்கு திரைப்படங்களின் மூலம் அறிமுகமாகி நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் நடித்து மிகவும் பிரபலமான இவர் தமிழில் முதன்முதலாக இயக்குனர் ஹரி இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியடைந்த சாமி திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

அதைவிட இருமடங்கு

அதைவிட இருமடங்கு

இவ்வாறு இவர் தமிழில் அறிமுகமான சாமி திரைப் படத்தில் விக்ரமின் கதாபாத்திரம் எந்த அளவுக்கு பேசப்பட்டதோ அதைவிட இருமடங்கு பிரபலமாக இவரின் பெருமாள் பிச்சை கதாபாத்திரம் பேசப்பட்டது.

கரகர குரலின்

கரகர குரலின்

இவ்வாறு தமிழில் இவர் நடித்த முதல் படமே அவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத் தந்த நிலையில் அதை தொடர்ந்து குத்து, திருப்பாச்சி போன்ற திரைப்படங்களில் தனது வில்லத்தனத்தை அனைவரும் ரசிக்கும் வகையில் தனது கரகர குரலின் மூலமும் விக்கி விக்கி சிரிக்கும் சிரிப்பில் மூலமும் அனைவரையும் பயமுறுத்தி வந்தார்.

காமெடி லூட்டி

காமெடி லூட்டி

தொடர்ந்து வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து நம் அனைவரையும் மிரட்டி வந்த
கோட்டா சீனிவாச ராவ் இயக்குனர் எம். ராஜேஷ் இயக்கத்தில் கார்த்தி நடித்த ஆல் இன் ஆல் அழகுராஜா திரைப்படத்தில் நடிகர் சந்தானம் உடன் இணைந்து இவர் அடிக்கும் காமெடி லூட்டி மக்கள் இவரின் மீது வைத்திருந்த கொடூர வில்லன் நடிகர் என்ற பெயரை மாற்றி காட்டியது.

சிறப்பான நடிப்பின்

சிறப்பான நடிப்பின்

இவ்வாறு வில்லன், காமெடியன், குணச்சித்திர நடிகர், அப்பா என எந்த வேடம் கொடுத்தாலும் அதில் அனைவரையும் ரசிக்க வைக்கும் தனது சிறப்பான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்து வந்த கோட்டா சீனிவாச ராவ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

பிறந்தநாள்

பிறந்தநாள்

ஜூலை 10 ஆம் தேதியான இன்று இவர் தனது 73 வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தனது குடும்பத்தாருடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வரும் அதே நேரத்தில் இவரை திரையில் பார்த்து ரசித்த பல ரசிகர்களும் இவருக்கு வாழ்த்துக்களை சொல்லி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X