மரண வதந்தி.. திருப்பாச்சி பட வில்லன் நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் வருத்தம்.. வீடியோ வெளியீடு!
ஐதராபாத் : நடிகர் கோட்டா சீனிவாசராவ் அதிகமான தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.
அதிகமான வில்லன் கேரக்டர்களில் நடித்துள்ள கோட்டா சீனிவாசராவ், கேரக்டர் ரோல்களிலும் காமெடி கேரக்டர்களிலும் நடித்துள்ளார்.
இவர் இறந்ததாக தற்போது தகவல்கள் பரவிய நிலையில் வீடியோ மூலம் அதை கோட்டா சீனிவாசராவ் மறுத்துள்ளார்.

நடிகர் கோட்டா சீனிவாச ராவ்
பிரபல தெலுங்கு மற்றும் தமிழ்ப்படங்களின் வில்லன் கோட்டா சீனிவாசராவ் தமிழில் விஜய்யின் திருப்பாச்சி படத்தில் சனியன் சகடை என்ற கேரக்டரில் நடித்து புகழ் பெற்றவர். தாண்டவம், சகுதி, கொக்கி, ஏய், கோ, சாமி, குத்து என தமிழில் ஏறக்குறைய 30 படங்களில் நடித்துள்ளார். பாடகராகவும் தன்னை நிரூபித்த கோட்டா சீனிவாசராவ், தெலுங்கிலும் 700க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். வில்லனாக அதிகமான படங்களில் நடித்துள்ள கோட்டா சீனிவாசராவ், கேரக்டர் ரோல்களிலும், காமெடி கேரக்டர்களிலும் கூட சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர்.

மிரட்டலான வில்லன் நடிகர்
1975ம் ஆண்டுகளில் நடிக்கத் துவங்கிய இவர், தற்போது வரை நடித்து வருகிறார். இவருடைய மிரட்டலான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், இவருக்கு தமிழிலும் தெலுங்கிலும் அதிகமான வாய்ப்புகள் குவிந்தன. மிரட்டலான வில்லனாக மட்டுமில்லாமல் தன்னால் காமெடியிலும் கேரக்டர் ரோல்களிலும் மாஸ் காட்ட முடியும் என்றும் நிரூபித்தவர். 80 ஆண்டுகளை கடந்த நிலையிலும் நடித்து வருகிறார்.

கோட்டா சீனிவாசராவ் மகன் மரணம்
ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பைக் விபத்தில் இவரது மகன் இறந்தபோது இவர் உடைந்துப் போனார். இவரது மகன் சாய் பிரசாத்தும் சில படங்களில் நடித்துவந்த நிலையில், தன்னுடைய மனைவி மற்றும் மகன்கள் முன்பே விபத்திற்குள்ளாகி தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் உயிரிழந்தார். இந்த சோகம் கோட்டா சீனிவாசராவ் தலையில் இடியென தாக்கியது இருந்த போதிலும் படங்களில் நடிப்பதன்மூலம் தன்னை ஆசுவாசப்படுத்தி வந்தார்.

கோட்டா உயிரிழந்ததாக வதந்தி
தற்போது 80 வயதை பூர்த்தி செய்துள்ள கோட்டா சீனிவாசராவ் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து அவரது வீட்டிற்கு ரசிகர்கள் படையெடுத்தனர். பலரும் தொலைபேசி மூலமும் துக்கம் விசாரிக்கத் துவங்கினர். கோட்டா சீனிவாசராவ் மரணம் குறித்து தெலுங்கு படவுலகம் அதிர்ச்சி அடைந்த நிலையில், இது வதந்தி என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து ஆசுவாசப்படுத்திக் கொள்வதா அல்லது இந்த வதந்தியை பரப்பியவர்கள்மீது கோபப்படுவதா என்பது தெரியாமல் ரசிகர்கள் கோபமடைந்தனர்.

வீடியோ மூலம் விளக்கம்
இந்நிலையில் தன்னுடைய மரணம் குறித்த செய்தி பொய்யானது என்றும் அதை ரசிகர்கள் யாரும் நம்ப வேண்டாம் என்றும் கோட்டா சீனிவாசராவ் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். தான் நலமுடனும் வலிமையுடனும் இருப்பதாகவும் இத்தகைய வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அரசியலிலும் சில காலம் சிறப்பாக செயல்பட்டுவந்த கோட்டா சீனிவாசராவ் மேலும் பல ஆண்டுகள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்று ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











