தலைவன் தலைவி படத்தை தன்னோட தலைவியோட பார்த்த கொட்டாச்சி.. என்னம்மா கத்தி பார்க்குறாங்க!

சென்னை: நகைச்சுவை நடிகர் கொட்டாச்சி தனது மனைவி அஞ்சலியுடன் 'தலைவன் தலைவி' படத்தை தியேட்டரில் பார்த்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்களையும் இந்த படத்தை ஜோடியுடன் சேர்ந்து பார்க்கத் தூண்டியுள்ளார்.

கணவன் - மனைவி இடையே சண்டை எப்படி எல்லாம் வரும், யார் மூலமாக எல்லாம் வரும் என்பதை பாண்டிராஜ் தனது ஸ்டைலில் காமெடியை கலந்து காட்டி தியேட்டர்களை திருவிழாவாக மாற்றியுள்ளார். இந்த ஜூலை மாதம் இதுவரை வெளியான படங்கள் எல்லாம் ரசிகர்களை போரடித்துக் கொண்டிருந்த நிலையில், கடைசி வரை தியேட்டர்களில் சிரிப்பு சத்தம் கேட்கும் அளவுக்கு ஒரு பிளாக்பஸ்டர் படமாக தலைவன் தலைவி வெளியாகி இருக்கிறது.

Actor Kottachi watching Thalaivan Thalaivi movie with his wife video goes viral
Photo Credit:

மாமன் படத்திற்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் உள்ள மக்கள் தியேட்டர்களை நோக்கி படையெடுக்க ஒரு பக்காவான கமர்ஷியல் கிராமத்து படமாக உருவாகியுள்ள இந்த படத்தை தனது தலைவியுடன் என்ஜாய் பண்ணி பார்த்த வீடியோவை காமெடி நடிகர் கொட்டாச்சி வெளியிட்டுள்ளார்.

மகளால் பெருமிதம்: நகைச்சுவை நடிகர் கொட்டாச்சி பல வருடங்களாக துணை காமெடி நடிகராக வடிவேலு மற்றும் விவேக் படங்களில் அதிகம் நடித்துள்ளார். ஆனால், அவருக்கு பேரும் புகழும் கிடைத்தது எப்போது என்றால் அவருடைய மகள் மானஸ்வி விஜய் சேதுபதி, நயன்தாராவின் மகளாக இமைக்கா நொடிகள் படத்தில் நடித்த போதுதான் என அவரே கூறியுள்ளார். கொட்டாச்சிக்கு இப்படியொரு மகளா? என ஆச்சர்யப்பட்ட பலரும், அவரது மனைவி யாரென தேட ஆரம்பித்தனர். அனைத்துக்கும் காரணம் கொட்டாச்சியை திருமணம் செய்துக் கொண்ட அஞ்சலி தான் என ரசிகர்கள் அந்த தம்பதியினரை வாழ்த்த ஆரம்பித்தனர். குழந்தை நட்சத்திரமான மானஸ்வி பல படங்களில் நடித்து பிரபலமாகி தனது தந்தைக்கு பெருமை சேர்த்து தந்துள்ளார்.

மனைவியோடு தலைவன் தலைவி: விஜய் சேதுபதி, நித்யா மேனன், யோகி பாபு, ஆர்கே சுரேஷ், தீபா, செம்பன் வினோத், ரோஷினி ஹரிப்ரியா, காளி வெங்கட், மைனா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த தலைவன் தலைவி படத்தை மிஸ் பண்ணாம உங்க மனைவியோடு சேர்ந்து தியேட்டருக்குப் போய் பாருங்க.. அந்த வைபே வேறலெவலில் இருக்கும் என்பதற்கு உதாரணமாக கொட்டாச்சி மற்றும் அவரது மனைவி அஞ்சலி வெளியிட்டுள்ள தியேட்டர் வீடியோ சும்மா சோஷியல் மீடியாவில் தெறிக்குது.

விஜய் சேதுபதியை விட சவுண்டா கத்துறாங்களே: தலைவன் தலைவி படத்தில் விஜய் சேதுபதி ஓவராக கத்தி பேசுவதாக கடுமையான விமர்சனங்கள் ஒரு பக்கம் கிளம்பினாலும், சண்டை போடும் போது கத்தி தான் பேசுவார்கள் என்றும் அதிலும், மதுரைக்காரர்களுக்கெல்லாம் விஜய் சேதுபதியின் கேரக்டர் செமையா கனெக்ட் ஆகிவிடும் என்றும் கூறுகின்றனர். விஜய் சேதுபதியின் ஓபனிங் காட்சிக்கு அஞ்சலி செம சவுண்ட் போட்டு கத்தி கூச்சலிட்டு ரசித்துப் பார்க்கும் வீடியோவை நடிகர் கொட்டாச்சி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அஞ்சலியும் தனது இன்ஸ்டாவில் இதை ஷேர் செய்துள்ளார். குழந்தை மானஸ்வியை எங்கே விட்டுட்டுட்டு வந்துட்டீங்க என ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் இருவரையும் கேட்டு வருகின்றனர்.

ஜோடியா கிளம்புங்க: இந்த வாரம் வீட்டில் கணவனும் மனைவியும் சும்மா சண்டைப் போட்டுக் கொள்ளாமல் தியேட்டருக்கு ஜோடியா சென்று படத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் போடும் சண்டையை ஜாலியாக பார்த்து சிரித்து விட்டு வாங்க என சொல்வது போல இவர்களது வீடியோ அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X