ஒரே வாரத்தில் 3 நகைச்சுவை நடிகர்கள் மரணம்: பேரதிர்ச்சியில் கோலிவுட்

By Siva

Recommended Video

ஒரே வாரத்தில் 3 நகைச்சுவை நடிகர்கள் மரணம்

சென்னை: நகைச்சுவை நடிகர் கோவை செந்தில் உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிர் இழந்தார்.

இயக்குனர் விக்ரமனின் படங்களில் தவறாமல் நடித்து வந்தவர் கோவை செந்தில். படையப்பா, கோவா, இது நம்ம ஆளு, தமிழ் படம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

Actor Kovai Senthil no more

உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிர் இழந்தார். அவருக்கு வயது 74. அவரின் மரண செய்தி அறிந்து திரையுலகினர் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

முன்னதாக கடந்த 4ம் தேதி நகைச்சுவை நடிகர் ராக்கெட் ராமநாதனும், 5ம் தேதி வெள்ளை சுப்பையாவும் உடல் நலக்குறைவால் உயிர் இழந்தனர். ஒரே வாரத்தில் 3 நகைச்சுவை நடிகர்கள் மரணம் அடைந்துள்ளது திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 'கோவை செந்திலின் மறைவால் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தாரின் துக்கத்தில் தென்னிந்திய நடிகர் சங்கமும் பங்கு கொண்டு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு, அவரது ஆத்மா சாந்தி அடையவும் பிராத்திக்கிறோம்' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X