48 வயதில் தந்தையானார் நடிகர் கிருஷ்ணா.. குவியும் வாழ்த்து!
சென்னை: தமிழ் சினிமாவில் 'பில்லா', 'ஆரம்பம்' போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் விஷ்ணுவர்தனின் தம்பியும், நடிகருமானவர் தான் கிருஷ்ணா. இவர், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கிளாசிக் திரைப்படமான 'அஞ்சலி' படத்தில் குழந்தை நட்சத்திரமாகத் அறிமுகம் ஆனார்.
அதன் பின்னர், 'அலிபாபா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுக இவர், தொடர்ந்து வல்லினம், யாமிருக்க பயமே, பண்டிகை, நிபுணன், கழுகு எனப் பல வித்யாசமான படங்களில் ஹீரோவாக நடித்தார். எனினும், சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியைத் தராததால், குணச்சித்திர வேடங்களிலும் நடித்தார். குறிப்பாக நடிகர் தனுஷுடன் 'மாரி 2' திரைப்படத்தில் அவர் நடித்த அஜய் கதாபாத்திரம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
விவாகரத்து : நடிகர் கிருஷ்ணா கடந்த 2014-ஆம் ஆண்டு ஹேமலதா என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். ஆனால், துரதிர்ஷ்டவசமாகத் திருமணமான ஒரே வருடத்திலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2016 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுப் பிரிந்தனர். இதையடுத்து, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது 47-வது வயதில் அவர் ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். தனது திருமணப் புகைப்படத்தைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த கிருஷ்ணா, தனது இரண்டாவது மனைவி யார் என்பதை வெளிப்படையாக அறிவிக்காமல், முகம் தெரியாத வகையிலான ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து இருந்தார்.

போதைப்பொருள் வழக்கில்: கடந்த ஆண்டு போதைப்பொருள் வழக்கு ஒன்றில் சிக்கி நடிகர் கிருஷ்ணா சிறைக்குச் செல்ல நேரிட்டது. இந்தச் சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது அந்த வழக்கில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ள கிருஷ்ணா, தனக்குப் பெண் குழந்தை பிறந்துள்ள மகிழ்ச்சியான செய்தியைத் தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.அதில், "எங்கள் உலகம் இப்போது இன்னும் கொஞ்சம் பெரிதாகிவிட்டது. எனது இரண்டு பெண் குழந்தைகளும்நலமாக உள்ளனர்" என மிகவும் எமோஷனலாகப் பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த திரை உலக பிரபலங்களும், ரசிகர்களும் என பலரும் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்!


Click it and Unblock the Notifications