போதை பொருள் வழக்கு.. ஸ்ரீகாந்த்தை அடுத்து இன்னொரு தமிழ் ஹீரோவும் கைது.. இன்னும் எத்தனை பேர்?

சென்னை: நடிகர் ஸ்ரீகாந்த் தடை செய்யப்பட்ட கொக்கைன் போதை பொருளை பயன்படுத்தியதால் கைது செய்யப்பட்டு புழல் சிறியில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவரைப் போன்று நடிகர் கிருஷ்ணாவையும் இந்த வழக்கில் விசாரிக்க காவல் துறையினர் முடிவு செய்தார்கள். நேற்று அவர் தனது வழக்கறிஞருட்ன் காவல் நிலையத்தில் ஆஜரானதையடுத்து அவரிடமும் தீவிரமான விசாரணையை போலீஸ் மேற்கொண்டது.

நுங்கம்பாக்கத்தில் இருக்கும் ஒரு மது விடுதியில் அதிமுக நிர்வாகி பிரசாத் என்பவர் அடிதடியில் ஈடுபட்டார். அவரை கைது செய்து அவரது செல்ஃபோனை காவலர்கள் ஆய்வு செய்தார்கள். அப்போது பிரதீப் என்ற போதை பொருள் விற்பனையாளருடன் அவருக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது. அதனையடுத்து பிரதீப்பை உடனடியாக கைது செய்து விசாரணையை தொடங்கினார்கள். அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.

ஸ்ரீகாந்த், கிருஷ்ணா: பிரதீப் கொடுத்த வாக்குமூலத்தில், ஸ்ரீகாந்த்துக்கு கொடுக்க வேண்டுமென்று சொல்லி என்னிடமிருந்து பிரசாத் கொக்கைன் போதை பொருளை வாங்கி சென்றிருக்கிறார் என்றும்; ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் கொக்கைன் பயன்படுத்துவதை தானே பார்த்திருக்கிறேன் என்றும் குறிப்பிட்டார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து ஸ்ரீகாந்த்திடம் விசாரணையை தொடங்கியது போலீஸ்.

Actor Krishna arrested in drug case like Srikanth
Photo Credit:

ஸ்ரீகாந்த்தும் கைது: தன்னிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது தான் போதை பொருள் பயன்படுத்தவே இல்லை என்று கூறினார் ஸ்ரீகாந்த். அதனையடுத்து அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர் போதை பொருள் எடுத்திருப்பது உறுதியானது. எனவே கைது செய்யப்பட்டார். அவர் எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவையும் நீதிபதி அதிரடியாக நிராகரித்தார். இப்போது புழல் சிறையில் முதல் வகுப்பு சிறையில் இருக்கிறார்.

கிருஷ்ணாவிடம் விசாரணை: சூழல் இப்படி இருக்க இதில் சம்பந்தப்பட்டிருக்கும் கிருஷ்ணா நேற்று விசாரணைக்காக காவல் நிலையத்தில் ஆஜரானார். அப்போது அவர், எனக்கு இரைப்பை அலர்ஜி இருப்பதன் காரணமாக நான் போதை பொருள் பயன்படுத்துவதற்கு வாய்ப்பே இல்லை. இதய துடிப்பு வேகமாக இருப்பதற்காக சிகிச்சை எடுத்து வருகிறேன். பிரதீப் குமாருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஸ்ரீகாந்த் உடன் மட்டும்தான் எனக்கு நட்பு. பிரசாத்திடமிருந்து நான் போதை பொருள் வாங்கி செல்வதாக தவறாக பிரதீப் கூறியிருக்கிறார்" என குறிப்பிட்டிருந்தார்.

வீட்டில் காவல் துறையினர்: கிருஷ்ணா தனது வாக்குமூலத்தில் அவ்வாறு சொன்னாலும் அவரது வீட்டில் ஏதேனும் போதை பொருள் இருக்கிறதா என்பதை பார்ப்பதற்காக பெசன்ட் நகரில் இருக்கும் அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தியது. அந்த சோதனையில் கிருஷ்ணா பயன்படுத்திய மருந்துகள் எல்லாம் கைப்பற்றப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்நிலையில் அவரை போலீஸார் அவரது வீட்டில் வைத்து அவரை கைது செய்திருப்பதாக தகவல்கள் வெளியாக ஆரம்பித்திருக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X