லாக்டவுன்ல பாக்குற வேலையா இது… கழுகு பட நடிகரின் வைரல் பிக்ஸ் !
சென்னை : நடிகர் கிருஷ்ணா, அம்மாவுக்கு முடி வெட்டி விடும் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார்
அலிபாபா, யாமிருக்கபயமே, வானவராயன் வல்லவராயன் உட்பட பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருப்பவர் கிருஷ்ணா .
தற்போது இவர், கழுகு2, பெல் பாட்டம், கிரகணம், ராயர் பரம்பரை உள்ளிட்ட படங்ககளை கைவசம் வைத்துள்ளார்.

தெரிந்த முகம்
கழுகு திரைப்படத்தில் நடித்தன் மூலம் அனைவருக்கும் தெரிந்த முகமானார் நடிகர் கிருஷ்ணா. கொடைக்கானலில் பள்ளத்தாக்கில் தற்கொலை செய்து கொண்டு இறப்பவர்களின் உடலை மீட்டு கொண்டு வரும் வேலை பார்க்கும் இளைஞரான நடித்திருப்பார் கிருஷ்ணா

ஹீரோயினாக
இந்த திரைப்படத்தில் நடிகை பிந்து மாதவி, கருணாஸ், தம்பி ராமையா, சுஜி பாலா, காளி வெங்கட், எம்.எஸ். பாஸ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் விமர்சன ரீதியாவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

பெயர் சொல்லவில்லை
நடிகர் கிருஷ்ணா கழுகு படத்திற்கு முன்பாக அஞ்சலி, இருவர் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். இதையடுத்து அலிபாபாதிரைப்படத்தில் வேலு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இருப்பினும் இப்படம் இவருக்கு பெயர் சொல்லும் திரைப்படமாக அமையவில்லை.

பட வாய்ப்புகள்
கழுகு படத்திற்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் வந்தன. இதையடுத்து, யாமிருக்க பயமே, வானவராயன் வல்லவராயன் உட்பட பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருப்பவர் கிருஷ்ணா .

பாராட்டு
ஊரடங்கால் வீட்டில் குடும்பத்தினருடன் ஓய்வு எடுத்து வரும் கிருஷ்ணா தனது அம்மாவுக்கு முடி வெட்டிய புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், அம்மாவுக்கு தாயாக நான் மாறி முடி வெட்டிய தருணம் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து அனைவரும் அவரை பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











