139 பேர், 5000 முறை பாலியல் வன்கொடுமை.. பிரபல காமெடி நடிகர் மீதும் இளம் பெண் பரபரப்பு புகார்!

By

ஐதராபாத்: தன்னை 139 பேர், ஐயாயிரம் முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக அதிர்ச்சி கொடுத்துள்ள பெண் ஒருவர், காமெடி நடிகர் மீதும் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

நடிகைகளுக்கு எதிரான பாலியல் புகார் பற்றி கூறுவதற்காக கடந்த சில வருடங்களுக்கு முன் மீ டு என்ற ஹேஷ்டேக் உருவானது.

இதன் மூலம் பல நடிகைகள், பிரபல நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார்களை கூறிவந்தனர்.

பாலியல் புகார்

பாலியல் புகார்

இதுபரபரப்பானது. இந்நிலையில் சினிமாவைச் சேராத பெண் ஒருவர் காமெடி நடிகர் மீது பாலியல் புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிரபல தெலுங்கு காமெடி நடிகர், கிருஷ்ணுடு. மகேஷ்பாபுவின் போக்கிரி, ஆர்யா 2, மிஸ்டர் பெர்பக்ட், மனம், ராம்லீலா, கோபாலா கோபாலா உள்பட பல படங்களில் காமெடி கேரக்டர்களில் நடித்துள்ளார்.

தமிழில் விநாயகா

தமிழில் விநாயகா

விநாயக்டு என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்திருந்தார். இதில் சோனியா, பூனம் கவுர் உள்பட நடித்திருந்தனர். இந்த படம் தமிழில் விநாயகா என்ற பெயரில் உருவானது. இதில் சந்தானம் காமெடி கேரக்டரில் நடித்திருந்தார். இவர் மீது தெலங்கானா மாநிலத்தில் உள்ள மிரியாலகுடாவை சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாலியல் வன்கொடுமை

பாலியல் வன்கொடுமை

அந்தப் பெண், பஞ்சகுட்டா காவல் நிலையத்தில் அளித்துள்ள பரபரப்பு புகாரில், சில வருடங்களாக, தன்னை 139 பேர், ஐயாயிரம் முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதில் சினிமா நடிகர்கள், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், செய்தியாளர்கள், மாணவர்கள் சங்க தலைவர்கள் உள்பட பலரும் அடக்கம்.

கிருஷ்ணுடு மறுப்பு

கிருஷ்ணுடு மறுப்பு

நடிகர் கிருஷ்ணுடுவும் கடந்த சில வருடங்களுக்கு முன் தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்தார் என்று கூறியுள்ளார். இந்தப் புகார் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே தன் மீதான புகாரை நடிகர் கிருஷ்ணுடு மறுத்துள்ளார். எப்போதோ நடந்ததாகக் கூறப்படும் இந்த புகாரைக் கேட்டு தானும் தனது மனைவியும் அதிர்ச்சி அடைந்ததாகவும் விரைவில் உண்மை வெளிவரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X