பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகுகிறாரா கதிர்.. ரசிகர்கள் அதிர்ச்சி.. ஏன் இப்படி?
சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கதிர் என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் நடிகர் குமரன்.
இந்தத் தொடரில் கதிர் மற்றும் முல்லை ஜோடிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை முல்லை கேரக்டரில் 3 நடிகைகள் மாறியுள்ளனர்.
இந்நிலையில் அதிகமான வெப் தொடர்களில் கதிர் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.

விஜய் டிவி தொடர்கள்
விஜய் டிவி நிகழ்ச்சிகளுக்கு இணையாக தொடர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அந்த வகையில் பாக்கியலட்சுமி, பாரதி கண்ணம்மா போன்ற தொடர்களுக்கு அடுத்ததாக சேனலின் முக்கியமான தொடராக பாண்டியன் ஸ்டோர்ஸ் காணப்படுகிறது. இந்தத் தொடர் அண்ணன் -தம்பிகளின் பாசத்தையும் கூட்டுக் குடும்பத்தின் முக்கியத்துவத்தையும் கதைக்களமாக கொண்டுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்
மூர்த்தி, ஜீவா, கதிர், கண்ணன் என 4 சகோதரர்கள் மற்றும் அவர்களின் மனைவிகள் என கேரக்டர்களை கொண்டுள்ள இந்த சீரியலில், எத்தகைய பிரச்சினைகளை எதிர்கொண்டாலும் தங்களின் குடும்ப ஒற்றுமைக்காக அவர்கள் மெனக்கெடுவதும், ஒன்றாக இருந்த அதை எதிர்கொள்வதுமாக அடுத்தடுத்த எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

கதிர் -முல்லை ஜோடி
இந்த குடும்பத்தின் ஆணிவேறாக, குடும்பத்தின் ஒற்றுமையை சிறப்பாக மெயின்டெயின் செய்துவரும் கேரக்டரில் மூத்த அண்ணி தனம் காணப்படுகிறார். இதனிடையே இவர்களில் மிகவும் சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுள்ளனர் கதிர் மற்றும் முல்லை. இதுவரை முல்லை கேரக்டரில் 3 பேர் மாறியுள்ளனர்.

சிறப்பான கதிர் கேரக்டர்
ஆனாலும் ஆரம்பம் முதலே கதிர் கேரக்டரில் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகிறார் குமரன். இடையில் சில பிரச்சினைகள் காரணமாக கதிர் மற்றும் முல்லை வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், இவர்களுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்துக்களை ரசிகர்கள் பதிவிட்டனர்.

சீரியலில் இருந்து விலகும் குமரன்
இந்நிலையில் சீரியலுடன் வெப் தொடர்களிலும் குமரன் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார். இவரது நடிப்பில் வெளியான வதந்தி வெப் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அடுத்ததாக மாய தோட்டா வெப் தொடரில் லீட் கேரக்டரில் நடித்துள்ளார் குமரன்.

சினிமாவில் கவனம்
வெப் தொடர்களில் மட்டுமில்லாமல் அடுத்ததாக சினிமாவிலும் குமரன் கவனம் செலுத்தவுள்ள நிலையில், தொடர்ந்து அடுத்தடுத்த சீரியல்களில் அவர் நடிக்க மாட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலும் தொடர்ந்து நடிப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











