லேடி கெட்டப்பில் ரசிகர்களை ஆச்சரியப்படவைத்த பிரபல நடிகர்!
Recommended Video

சென்னை : தமிழ் சினிமாவில் சில நடிகர்கள் பெண் வேடத்தில் நடித்து அசத்தியுள்ளனர். சமீபத்தில் சிவகார்த்திகேயனும், விஜய் சேதுபதியும் லேடி கெட்டப்பில் நடித்திருக்கின்றனர்.
இந்நிலையில், 'பாகமதி' உள்ளிட்ட படங்களில் நடித்த மலையாள நடிகர் உன்னி முகுந்தன் பெண் வேடத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.
'சாணக்ய தந்தரம்' படத்துக்காக லேடி கெட்டப் போட்டிருக்கிறார் உன்னி முகுந்தன். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வைரலாகி வருகிறது.

பெண் வேடம்
சினிமாவிலும், நடிப்பிலும் மிகுந்த ஆர்வம் கொண்ட நடிகர்கள் தங்களுக்கென்று ஒரு தனி பாணியை அமைக்க நிறைய புதுப்புது விஷயங்களைச் செய்து வருகின்றனர். அப்படி சில நடிகர்கள் பெண் வேடம் போட்டு நடித்து ரசிகர்களை அசத்தியுள்ளனர்.

உன்னி முகுந்தன்
நடிகர், நடிகைகள் அவர்களது தோற்றம் வரை முழுமையாக மாற்றி கொள்கிறார்கள். அந்த அளவிற்கு ஒரு கதாபாத்திரத்திற்காக கஷ்டப்படுகிறார்கள். இவ்வாறு தற்போது ஒரு படத்திற்காக பெண் வேடம் அணிந்துள்ளார் நடிகர் உன்னி முகுந்தன்.

பெண்ணாகவே மாறிய நடிகர்
'சாணக்ய தந்தரம்' என்ற படத்திற்காக உன்னி முகுந்தன் பெண் வேடத்தில் நடிக்கிறாராம். இவரின் இந்தப் பெண் தோற்றம் அடையாளம் காணும் வகையில் இல்லை. உண்மையில் ஒரு பெண் போலவே இருக்கிறது.
பாகமதி ஹீரோ
'சாணக்ய தந்தரம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடம் வைரலாக பரவி வருகிறது. இவர் சமீபத்தில் அனுஷ்கா நடிப்பில் வெளியான 'பாகமதி' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவள் எனது மறு பாதி
லேடி கெட்டப்பில் இருக்கும் புகைப்படத்தை அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து அவர் கூறியதாவது, "இவள் தான் எனது மறு பாதி. இவளை காண நான் பல கஷ்டங்களை கடந்துள்ளேன். ஆனால் தற்போது நான் அவளை பார்த்துவிட்டேன். இந்தப் பயணத்தில் இருந்த கஷ்டங்கள் இப்போது சரி என்று தோன்றுகிறது" என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











