தனுஷ் மாரி செல்வராஜ் கூட்டணியில் இணைந்த சீமராஜா வில்லன் லால்
சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தில், தற்போது புதிதாக நடிகர் லால் இணைந்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் செய்தி கசிந்துள்ளது. இதனை நடிகர் லால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் தெரிவித்துள்ளார். லால் தமிழில் கடைசியாக சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா படத்தில் வில்லனாக நடித்து இருந்தார்.
பரியேறும் பெருமாள் தமிழ் சினிமாவில் அதுவரை பேசப்படாத பல உண்மைகளை பேசிய திரைப்படம். கதையில் பல சமூக அவலங்களை பேசியிருந்தார் மாரி செல்வராஜ். பல ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவே இந்த படம் அமைந்திருந்தது. இப்படத்திற்காக பல விருதுகள் வழங்கபட்டது.

முக்கியமாக கோவா திரைப்பட விழாவில் பரியேறும் பெருமாள் படத்திற்கு விருது கிடைத்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பரியேறும் பெருமாள் படத்திற்கு பிறகு இயக்குநர் மாரி செல்வராஜ், நடிகர் தனுஷை வைத்து படம் இயக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தனுஷ் கடைசியாக அசுரன் படத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று அனைத்து திரையரங்குகளிலும் வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும், இத்திரைப்படம் நிச்சயம் பல விருதுகளை குவிப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்று பல சினிமா வட்டாரங்களில் உற்சாகமாக பேசி வருகின்றனர்.
தற்போது தனுஷ் அசுரன் படத்தை தெடர்ந்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு, தற்போது லண்டனில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அசுரன் படத்தை லண்டனில் படக்குழுவுடனே கண்டு களித்தார் தனுஷ்.
அதற்கு பிறகு தனுஷ் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கத்தில் பட்டாஸ் படத்தில் நடிக்கிறார். ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் எதிர் நீச்சல் ,காக்கி சட்டை, கொடி ஆகிய படங்களை இயக்கியவர்.
அடுத்ததாக, தனுஷ், மாரி செல்வராஜ் இயக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் ஸ்டோரி டிஷ்கசனுக்காக, தனுஷ், மாரி செல்வராஜ் ஆகியோருடன் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் லண்டர் சென்றுள்ளனர்.
தற்போது இயக்குநர் மாரி செல்வராஜ், தனுஷ் இணையும் இப்படம் தொடர்பாக தற்போது ஒரு செய்தி கசிந்துள்ளது. நடிகர் லால் இந்த படத்தில் நடிக்க இருக்கிறாராம். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் லால் கூறியுள்ளார்.
லால் தமிழில் கடைசியாக சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா படத்தில் வில்லனாக நடித்து இருந்தார். அதற்கு பிறகு பிரபாஸின் சாகோ படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











