For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தனுஷ் பட்டாஸ் படத்தில் இணைந்த சிவகார்த்திக்கேயன் வில்லன் லால்

|

சென்னை: ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் பட்டாஸ் திரைப்படத்தில், தற்போது புதிதாக நடிகர் லால் இணைந்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் செய்தி கசிந்துள்ளது. இதனை நடிகர் லால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் தெரிவித்துள்ளார். லால் தமிழில் கடைசியாக சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா படத்தில் வில்லனாக நடித்து இருந்தார். சிவகார்த்திக்கேயனுடன் மோதிய வில்லன் இப்போது தனுஷ் உடன் மோதப்போகிறார்.

பரியேறும் பெருமாள் தமிழ் சினிமாவில் அதுவரை பேசப்படாத பல உண்மைகளை பேசிய திரைப்படம். கதையில் பல சமூக அவலங்களை பேசியிருந்தார் மாரி செல்வராஜ். பல ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவே இந்த படம் அமைத்திருந்தது. இப்படத்திற்காக பல விருதுகள் வழங்கபட்டது.

Actor Lal joins in Pattasu Movie with Dhanush

முக்கியமாக கோவா திரைப்பட விழாவில் பரியேறும் பெருமாள் படத்திற்கு விருது கிடைத்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பரியேறும் பெருமாள் படத்திற்கு பிறகு இயக்குநர் மாரி செல்வராஜ், நடிகர் தனுஷை வைத்து படம் இயக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தனுஷ் கடைசியாக அசுரன் படத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று அனைத்து திரையரங்குகளிலும் வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும், இத்திரைப்படம் நிச்சயம் பல விருதுகளை குவிப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்று பல சினிமா வட்டாரங்களில் உற்சாகமாக பேசி வருகின்றனர்.

Actor Lal joins in Pattasu Movie with Dhanush

தற்போது தனுஷ் அசுரன் படத்தை தெடர்ந்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு, தற்போது லண்டனில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அசரன் படத்தை லண்டனில் படக்குழுவுடனே கண்டு களித்தார் தனுஷ்.

அதற்கு பிறகு தனுஷ் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கத்தில் படத்தில் நடிக்கிறார். ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் எதிர் நீச்சல் ,காக்கி சட்டை, கொடி ஆகிய படங்களை இயக்கியவர். தற்போது தனுஷ் நடிப்பில் இவர் இயக்கும் படத்திற்கு பட்டாஸ் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

ஹீரோ, பட்டாஸ்... சூரரைப் போற்று- கிறிஸ்துமஸ் ரிலீஸ் படங்களில் பாக்ஸ் ஆபிஸில் வெல்வது யார்,

இயக்குநர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார், தனுஷ் இணையும் இப்படம் தொடர்பாக தற்போது ஒரு செய்தி கசிந்துள்ளது. நடிகர் லால் இந்த படத்தில் நடிக்க இருக்கிறாராம். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் லால் கூறியுள்ளார். லால் தமிழில் கடைசியாக சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா படத்தில் வில்லனாக நடித்து இருந்தார். அதற்கு பிறகு பிரபாஸின் சாகோ படத்திலும் நடித்திருந்தார். இந்த வில்லன் இப்போது தனுஷ் உடன் மோதப்போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
News has surfaced in cinema circles that the new actor Lal has joined the cast of Dhanush starrer 'Pattasu' directed by R.S.Durai Senthilkumar. Actor Lal said this on his Twitter page. Lal was the villain in the last Sivarathikeyan starring Seema Raja in Tamil.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more