லாரன்ஸ் படத்தின் புது போஸ்டர் ரிலீஸ்.. படம் எப்ப சார் ரிலீஸ்.. ரசிகர்கள் கேள்வி!
சென்னை: தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பினால் மக்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை ஏற்படுத்திக் கொண்டவர் நடன இயக்குநர் லாரன்ஸ். தொடக்கத்தில் ஒரு சில படங்களில் நல்ல குத்து பாடல்களுக்கு மட்டும் வந்து கொண்டு இருந்தவர், ஒரு கட்டத்திற்கு மேல் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தனது நடிப்புத் திறமையால் மக்கள் மத்தியில் நல்ல அங்கீகாரத்தைப் பெற்று வளர்ந்து வந்தார். இவரது நடிப்பில் வெளியான பாண்டி, முனி போன்ற படங்கள் குடும்பப் பெண்கள் மத்தியில் லாரன்ஸை கொண்டு சென்றது.
முனி படத்தின் இரண்டாம் பாகத்தில் திருநங்கை பேயாக நடித்து அனைவரையும் கண்கலங்கச் செய்தார். தமிழ் சினிமாவில் விட்லாச்சாரியாரிக்குப் பிறகு பேய் படங்கள் அதிக அளவில் உருவாக முக்கிய காரணமாக லாரன்ஸ் மாறினார். இதுவரை முனி டைட்டிலில் 4 பாகங்களை எடுத்துள்ள லாரன்ஸ் அடுத்து ஐந்தாவது பாகத்தினை எடுக்க திட்டமிட்டுள்ளார். அதாவது காஞ்சனா படத்தின் 4வது பாகத்தை வரும் செப்டம்பரில் இருந்து படமாக்க முடிவு செய்துள்ளார்.

இவரது நடிப்பில் கடைசியாக வெளியான ஜிகிர்தாண்டா டபுள் எக்ஸ் படத்தில் படம் முழுவதும் வரக்கூடிய கதாபாத்திரமாக நடித்தது மட்டும் இல்லாமல் க்ளைமேக்ஸில் "கோமாரே ஏன்" என கேள்வி கேட்கும்போது அனைவரையும் கண் கலங்க வைத்தார். இதனால் இந்த படம் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது.
மாற்றம்: பொதுவாகவே மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணம் கொண்ட ராகவா லாரன்ஸ் கடந்த மே 1ஆம் தேதி மாற்றம் என்ற அறக்கட்டளையை நிறுவி மக்களுக்கு உதவி செய்து வருகின்றார். மேலும் தன்னிடம் உதவி எனக் கேட்கும் நபர்களுக்கு நேரடியாகச் சென்று உதவும் தன்மை கொண்ட நகைச்சுவைக் கலைஞர் பாலாவுடன் இணைந்தும் உதவி செய்து வருகின்றார்.
அன்னையர் தினக் கொண்டாடம்: ராகாவேந்திரா கடவுள் மீது மிகுந்த பக்தி கொண்ட நடிகர் ராகவா லாரன்ஸ் ராகவேந்திராவுக்கு தனி கோவிலே அமைத்துள்ளார். மேலும் ஒவ்வொரு ஆண்டும் அன்னையர் தினத்தின் போது தனது அம்மாவுக்கு மட்டும் இல்லாமல் ஆசிரமங்களில் உள்ள முதியவர்களுடன் அன்னையர் தினத்தைக் கொண்டாடியும், அவர்களுக்கு உதவி செய்தும் வருகின்றார்.
தம்பி எல்வின்: இந்நிலையில் ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின் திரைப்படத்தில் நடிக்கவுள்ளாதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அவரது தம்பி நடிப்பில் உருவாகி வரும் படமான புல்லட் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இன்று எல்வினின் பிறந்த நாள் என்பதால் படக்குழு இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த படத்தை டைரி படத்தை இயக்கிய இன்னாசி பாண்டியன் இயக்கி வருகின்றார். இந்த படத்திற்கு புல்லட் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தில் ராகவா லாரன்ஸும் நடிக்கின்றார்.

புல்லட் படம் எப்போது ரிலீஸ்: எல்வின் ஏற்கனவே காஞ்சனா 2 மற்றும் காஞ்சனா 3 படங்களில் நடனமாடியுள்ளார். லாரன்ஸைப் போல் எல்வினும் நடனக் கலைஞர் என்பதால் படத்தில் படத்தில் என்னமாதிரியான கதை அமைக்கப்பட்டுள்ளது என்பதை பொருத்திருந்தான் பார்க்கவேண்டும். மேலும் கடந்த பிப்ரவரியிலேயே படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கிவிட்டது. மேலும் படம் தற்போது ரிலீசுக்கு தயாராகவுள்ளது. கடந்த ஆண்டே படம் தொடங்கப்பட்ட நிலையில் இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என லாரன்ஸ் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











