twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அஜித்தை தொடர்ந்து அள்ளிக்கொடுத்த லாரன்ஸ்.. கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.3 கோடி வழங்கி அசத்தல்!

    |

    சென்னை: கொரோனா நிவாரண நிதியாக நடிகர் லாரன்ஸ் ரூ. 3 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளார்.

    Recommended Video

    Breaking! Raghava Lawrence again proved his humanity | Chandramuki 2

    உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் 150க்கும் மேற்கொண்ட உயிர்களை பலி கொண்டுள்ளது.

    நாடு முழுக்க 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக பிரதமர் மோடி 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார்.

    வர வேண்டிய நேரத்துல வெயிட்டா வரும்.. சம்மர் சம்ஹாரம் நிச்சயம்..வர வேண்டிய நேரத்துல வெயிட்டா வரும்.. சம்மர் சம்ஹாரம் நிச்சயம்..

    பாதிப்பு

    பாதிப்பு

    இதனால் பெரும்பாலான தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். தினக்கூலியை நம்பியிருக்கும் தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். மத்திய மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்த வண்ணம் உள்ளன.

    அரசு கோரிக்கை

    அரசு கோரிக்கை

    தொழில்துறை முழுவதும் முடங்கியுள்ளதால் அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய மாநில அரசுகள், மக்களுக்கு உதவும் வகையில் தொழிலதிபர்கள் மற்றும் வசதியானவர்கள் நன்கொடை தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றன.

    ரூ.3 கோடி

    ரூ.3 கோடி

    இதனை தொடர்ந்து அரசுக்கு பொதுமக்கள், தொழிலதிபர்கள் மற்றும் சினிமா துறையினர் நன்கொடை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் லாரன்ஸ் 3 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்குவதாக அறிவித்துள்ளார்.

    தலா 50 லட்சம்

    தலா 50 லட்சம்

    பிரதமர் மற்றும் முதல்வர் நிவாரண நிதிக்கு தலா 50 லட்சம் வழங்குவதாக, திரைப்பட தொழிலாளர் சம்மேளனமான ஃபெஃப்ஸி அமைப்புக்கு 50 லட்சம் ரூபாய் வழங்குவதாகவும் அறிவித்துள்ளார் நடிகர் லாரன்ஸ். மேலும் நடனக் கலைஞர்கள் சங்கத்திற்கு 50 லட்சம் ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளார்.

    ஏழை மக்களுக்கு

    ஏழை மக்களுக்கு

    மேலும் மாற்றுத் திறனாளி இளைஞர்களுக்கு 25 லட்சம் ரூபாயும் தினக்கூலிகள் மற்றும் தான் பிறந்த இடமான ராயபுரம் தேசிய நகர் பகுதியை சேர்ந்த ஏழை மக்களுக்கு 75 லட்சம் ரூபாய் வழங்குவதாகவும் நடிகர் லாரன்ஸ் அறிவித்துள்ளார்.

    அட்வான்ஸ்

    அட்வான்ஸ்

    நிதி வழங்குவது குறித்த அறிவிப்பை தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார் நடிகர் லாரன்ஸ். நடிகர் ரஜினிகாந்துடன் நடிக்க உள்ள சந்திரமுகி 2 படத்தின் அட்வான்ஸ் தொகையில் இருந்து இந்த நிதியை வழங்குவதாக நடிகர் லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

    ஒன்றேகால் கோடி

    ஒன்றேகால் கோடி

    இதுவரை கொரோனா நிதிக்காக தமிழ் சினிமாவில் அதிக நிதியை கொடுத்த நடிகராக அஜித் இருந்தார். நடிகர் அஜித் மத்திய மாநில அரசுகளுக்கு தலா 50 லட்சம் ஃபெஃப்ஸி அமைப்புக்கு ரூ.25 லட்சம் என ஒன்றேகால் கோடி ரூபாய் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Actor Lawrence gives Rs. 3 crores for Corona relief fund. Actor Raghava lawrence has announced this in twitter.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X